ஐபோன் உற்பத்தி செலவு அப்டேட்..
இந்தியா மட்டுமின்றி பல வெளிநாடுகளிலும் ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் செல்போன்கள் பெரியளவில் விற்பனையாகின்றன. குறிப்பாக இரண்டு போன்களுமே சுமார் ஒருலட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கின்றன. இந்நிலையில் இந்த வகை செல்போன்களின் உற்பத்தி கட்டணம் , உள்ளீட்டு கட்டணம் உள்ளிட்டவை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பில்ஸ் ஆஃப் மெட்டீரிய்ஸ் என்ற கணக்குப்படி, நிக்கேய் என்ற நிறுவனம் இரு செல்போன்களின் விலைகளையும் வெளியே அறிவித்துள்ளன. அதன்படி, பிக்சல் 9 புரோ ரக செல்போன்கள் உற்பத்தி செலவு 34,210 ரூபாயாகவும், ஐபோன் 16 புரோ 47 ஆயிரத்து 860 ரூபாயாகவும் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பிக்சல் 8 புரோவை விட 9 புரோ மாடலின் உற்பத்தி விலை 11 விழுக்காடு குறைவாக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. பிக்சல் 9புரோவில் டென்சார் ஜி4 சிப் உள்ளது இதன் மதிப்பு வெறும் 6800 ரூபாய்தான். சாம்சங்கில் எம்14 மாடல் மற்றும் கேமிராவின் விலை 6,300 ரூபாய்தான். அதே போல் கேமிராவின் விலை 5,100 ரூபாய்தான். ஐபோன் 16 புரோவின் பில் விலை 6 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஏ18 புரோ சிப்செட்டின் விலை 11,400ரூபாய், ஸ்கிரீனுக்கு 9,300, கேமிராவின் விலை 7700 ரூபாய் மட்டும்தான். உற்பத்தி செலவை விட இரண்டு மடங்கு அதிக விலை வைத்ததுத்தான் ஆப்பிளும், கூகுளும் தங்கள் சொகுசு ரக ஃபோன்களை விற்று வருகின்றனர்.