இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி..
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதால் அமெரிக்க டாலர் மதிப்பு வலுவடைந்ததால் இந்திய ரூபாய்க்கு நிகரான மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு வியாழக்கிழமை இதுவரை இல்லாத அளவுக்கு 84.29 ரூபாயாக குறைந்துள்ளது. அமெரிக்காவில் வரிகள் குறைப்பு மற்றும் அமெரிக்காவை டிரம்ப் முன்னேற்றுவேன் என்று உறுதியளித்ததால் டாலர் மீது மக்கள் அதிகம் முதலீடு செய்துள்ளனர். அமெரிக்க டாலர் உயர்ந்தால், பிறநாட்டு பணங்களான யூரோ மற்றும் ஆசிய கரன்சிகளின் மதிப்புபெரியளவில் வீழ்ந்து வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பை மீட்டெடுக்க ரிசர்வ் வங்கி முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வணிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்திய பங்குச்சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியே செல்வதும் மிகமுக்கிய காரணியாக கருதப்படுகிறது. கடந்த மாதம் மட்டும் 11 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பங்குகளை முதலீட்டாளர்கள் விற்றுள்ளனர். இந்தமாதத்தில் இதுவரை மட்டும் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடுகள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளன. அமெரிக்க பெடரல் ரிசர்வின் முடிவை வைத்தே இந்திய சந்தைகளில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது