கோபத்தில் கொதித்தெழுந்த ஸ்ரீதர் வேம்பு..
ஃபிரஷ் ஒர்க்ஸ் என்ற நிறுவனம்அண்மையில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. ஃபிரஷ்ஒர்க்ஸ் நிறுவனத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர் 660 பணியாளர்களை அந்நிறுவனம் வேலையை விட்டு தூக்கியுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் சோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு. நிறுவனத்திடம் 1பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பணம் வைத்திருக்கும் நிறுவனம் 12 முதல் 13 விழுக்காடு வரை பணியாளர்களை ஆட்குறைப்பு செய்யும்போது, எஞ்சியிருக்கும் நிறுவன பணியாளர்களிடம் நேர்மையை எதிர்பார்க்கக் கூடாது என்றும் தெரிவித்தார். வியாபாரம் சரியும்போது நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை என்று கூறியுள்ள ஸ்ரீதர், பணியாளர்களை ஆட்குறைப்பு செய்யக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். 400 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு முதலீடு செய்யும் நிறுவனம், ஏன் பணியாளர்களை வைத்திருக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால்தான் இந்த நிறுவனம் இன்னும் தனியார் நிறுவனமாகவே இருப்பதாகவும் ஸ்ரீதர் குறிப்பிட்டு விளாசியுள்ளார். வாடிக்கையாளர்களையும், பணியாளர்களையும் தங்கள் நிறுவனம் முன்னிலைப்படுத்துவதாக கூறியுள்ள அவர், பங்குதாரர்களை கடைசியில் வைப்பதாக கூறியுள்ளார். ஏன் ஃபிரஷ்ஒர்க்ஸ் நிறுவனத்தை ஸ்ரீதர் திட்டித்தீர்க்கிறார் என்று விசாரிக்கும்போது தெரிந்தது, கிரீஷ் மாத்ருபூதம் என்பவர் சோஹோவில் 2010-க்கு முன்பு பணியாற்றியுள்ளார். அவர் தற்போது ஃபிரஷ்ஒர்க்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு விடைபெற்றுள்ளார். ஏற்கனவே இரு நிறுவனங்களுக்கும் இடையே சட்டப்போராட்டமும் நடைபெற்று வருகிறது. அதாவது சோஹோவின் ரகசிய ஆவணங்களை ஃபிரஷ்ஒர்க்ஸ் திருடிவிட்டதாக ஒரு புகார் இருக்கிறது. கடந்த 2021-ல் சோஹோவில் வேலைபார்த்த நபர் பிரஷ்ஒர்க்ஸில் பணியில் சேர்ந்ததும் பழைய கம்பெனி தரவுகளை திருடிவிட்டார் என்று இரு நிறுவனங்களுக்கும் இடையே பேசி பணம் செட்டில் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.