4 மாதங்களில் இல்லாத உச்சபட்ச பணவீக்கம்
இந்தியாவின் ஒட்டுமொத்த விற்பனை விலை குறியீடான WPI-ஐ மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அக்டோபர் மாதத்துக்கான அந்த குறியீடு, 2.36%ஆக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவாகும். கடந்த செப்டம்பரில் இந்த விகிதம் 1.84%ஆக இருந்தது. ஆகஸ்ட்டில் இது 1.31% ஆக இருந்தது. நாட்டின் மொத்த பணவீக்கவும் 0.3%உயர்ந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. செப்டம்பரில் இது வெறும் 0.1%அளவுக்கு மட்டுமே உயர்ந்திருந்தது. உணவுப்பொருட்கள் உள்பத்தி, மோட்டார் வாகனங்களின் உற்பத்தி, உள்ளிட்டவற்றின் உயர்வு காரணமாகவே அக்டோபரில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. சில்லறை பணவீக்கம்தான் மக்களை நேரடியாக பாதிக்கும் என்றாலும், ஒட்டுமொத்தமாக பொருட்களை வாங்கும்போதும், அதன் பாதிப்பும் அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தனிமங்கள் விலை 1.67% குறைந்துள்ளதாகவும், உணவு அல்லாத பொருட்கள் விலை 0.37% குறைந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரத்தின் விலை 1.18%உயர்ந்துள்ளதாகவும், நிலக்கரி 0.07 % குறைந்துள்ளதாகவும் அக்டோபர் மாதத் தரவுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கடந்த அக்டோபரில் நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணும் அதிகரித்திருந்தது. அதாவது 6.21%ஆக உயர்ந்துள்ளது. சில்லறை பணவீக்க விகிதம் 4%ஆக தொடரவேண்டும் என்பதே ரிசர்வ் வங்கியின் இலக்காக உள்ளது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி நிர்ணயித்ததை விடவும் அதிகமான அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளது.