ரூ.8,700 கோடி இழந்த எல்ஐசி..
கவுதம் அதானி நிறுவனத்தின் மீது அமெரிக்காவில் புகார்கள் எழுந்த நிலையில், அந்த நிறுவன பங்குகள் சரிந்தது. இதனால் எல்ஐசி நிறுவனத்துக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. அதானி நிறுவனத்தின் மீதான புகார்களால் அந்த நிறுவன பங்குகள் 23 %சரிந்தன. செப்டம்பர் மாத இறுதி வரை எல்ஐசி நிறுவனம், அதானியின் 7 நிறுவனங்களில் முதலீடு செய்தது. அதில் அதானி போர்ட்ஸ் நிறுவன பங்கு மதிப்பு சரிந்ததில் எல்ஐசிக்கு 2,960 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதற்கு அடுத்தபடியாக அதானி என்டர்பிரைசஸில் செய்த முதலீட்டால் 2995 கோடி ரூபாய் இழப்பு காணப்பட்டுள்ளது. அம்புஜா சிமென்ட்ஸில் செய்த முதலீட்டால் 822.34 கோடி ரூபாய் இழப்பை எல்ஐசி சந்தித்துள்ளது. அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தில் செய்யப்பட்ட முதலீட்டால் 462 கோடி ரூபாயும், அதானி எனெர்ஜியால் 716, அதானி கிரீன் எனர்ஜியால் 571 கோடியும், ஏசிசியால் எல்ஐசிக்கு 191 கோடி ரூபாயும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க சட்டத்துறை அதிகாரிகள் வெளியிட்ட புகார்கள் காரணமாக அதானி குழும நிறுவனங்களின் சந்தை மூலதனம் மட்டும் 2.24லட்சம் கோடி ரூபாய் இழப்பு உண்டாகியுள்ளது. ஏற்கனவே அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்டுள்ள புகார்களை மறுத்த அதானி குழுமம், தற்போது அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவல்களையும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.