பிரிகிறது வேதாந்தா..

சுரங்கத்தொழிலில் முன்னணி நிறுவனமாக உள்ள வேதாந்தா நிறுவனத்துக்கு கடன் சுமை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்திடம் வேதாந்தா ஒரு அறிக்கையை அளித்துள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள NCLT 90 நாட்களில் கடன்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு பணத்தை அளித்துவிட்டு தனியாக பிரிவது பற்றி யோசிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் அலுமீனியம், எண்ணெய் மற்றும் எரிவாயு, ஆற்றல் மற்றும் ஸ்டீல் மற்றும் இதர தனிமங்கள் தனித்தனியாகவும், ஜிங்க் மற்றும் அது தொடர்பான நிறுவனங்கள் வேதாந்தாவுக்கு கீழ் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 90 நாட்களில் பங்குதாரர்களுடனான சந்திப்பு நடத்தப்படவேண்டும் என்றும் நோட்டீஸ் கிடைத்தது முதல் 90 ஆவது நாளுக்குள் கூட்டம் நடக்கவேண்டும் என்றும் நிறுவன சட்டத் தீர்ப்பாயம் கேட்டுக்கொண்டுள்ளது. நிறுவனங்களை தனித்தனியாக பிரிப்பதால் வளர்ச்சி இருக்கும் என்று அந்த குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் குறிப்பிட்டார். தனியாக பிரிந்து செல்வது குறித்து வேதாந்தா நிறுவனத்துக்கு கடன் கொடுத்த 75 விழுக்காடு மக்கள் இசைவு தெரிவித்துள்ளனர். தனித்தனியாக இயங்குவதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நேரடியாக முதலீடு செய்து பெரிய வளர்ச்சியை எட்டவும் முடிகிறது என்று அனில் அகர்வால் கூறியுள்ளார். 2024 நிதியாண்டு முதல் 1.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை வளர்ச்சிக்கான சந்தை செலவினமாக அந்நிறுவனம் ஒதுக்கியுள்ளது. செப்டம்பருடன் முடிந்த காலாண்டில் அந்நிறுவனத்தின் நிகர லாபம் 4,352 கோடி ரூபாயாகவும் , கடந்தாண்டு இதே காலகட்டத்தில் நிகர நஷ்டம் 1,783 கோடி ரூபாயாகவும் இருந்ததாகவும் வேதாந்தா நிறுவனம் கூறியுள்ளது.