கார் லோனை விற்கும் எச்டிஎப்சி வங்கி..

இந்தியாவில் பிரபல தனியார் வங்கிகளில் ஒன்றாக திகழும் எச்டிஎப்சி வங்கி, தனது கார்லோன் பிரிவை 12,372 கோடி ரூபாய்க்கு விற்க இறுதிகட்ட பணிகளை செய்து வருகிறது. கடன் மற்றும் டெபாசிட் இடையேயான விகிதத்தை சமமாக வைத்துக்கொள்ள இந்த நடவடிக்கையை அந்த வங்கி இரண்டு மாதங்களில் இரண்டாவது விற்பனையை தொடங்க உள்ளது. எச்டிஎப்சியின் இந்த கடனை ஃபிட்ச் நிறுவனத்தின் கிளை நிறுவனமான இந்தியா ரேட்டிங்ஸ் மற்றும் ரிசர்ச் என்ற அமைப்பு டிரிப்பிள் ஏ என்று வகைபடுத்தியுள்ளது. சராசரி கடனாக 6.76லட்சம் ரூபாயை எச்டிஎப்சி வங்கி கொண்டுள்ளது. இதற்கான வட்டியாக 8.91விழுக்காடு வசூலிக்கப்படுகிறது. கடந்த செப்டம்பரிலும் இதே பாணியில் 9062 கோடி ரூபாய் மதிப்புள்ள கார் லோன்களை அந்த வங்கி விற்றிருந்தது. எச்டிஎப்சி வங்கியின் இணைப்புக்கு முன்பு 87 விழுக்காடாக இருந்த கடன்-டெபாசிட் விகிதம் தற்போது 100 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இதனை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை அந்த வங்கி எடுத்து வருகிறது. விதிகளுக்கு உட்பட்டு கடன்களை திரும்பப்பெறும் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சீரிஸ் ஏ1,ஏ2,ஏ3 என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ள கடன்கள் முதிர்வு கால அடிப்படையில் தனித்தனியாக வசூலிக்கப்பட இருக்கின்றன. 334 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி உத்தரவாத தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியா ரேட்டிங்கின் அடிப்படையில், ஏமாற்றும் விகிதம் 0.9 முதல் 1.1விழுக்காடாக இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொடுத்த கடன் திரும்பவரும் காலம், விகிதம், திரும்பி பணம் செலுத்தும் விகிதம் இவை அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட அளவிலேயே இருக்க வேண்டும் இந்தியா ரேட்டிங் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.