லேசான சரிவில் முடிந்த சந்தைகள்..
கடந்த வெள்ளி மற்றும் இந்தவாரம் திங்கட்கிழமை உயர்ந்து வந்த இந்திய பங்குச்சந்தைகள், செவ்வாய்க்கிழமை சரிவை கண்டன.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 105 புள்ளிகள் சரிந்து, 80ஆயிரத்து4 புள்ளிகளில் வர்த்கம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 27 புள்ளிகள் சரிந்து 24ஆயிரத்து 194 புள்ளிகளில் வணிகம் நிறைவுற்றது. முதல் ஒருமணி நேரம் ஏற்றம் காணப்பட்ட நிலையில், அதன் பிறகு நாள் முழுவதும் வர்த்தகம் ஊசலாட்டமாகவே இருந்தது. Britannia Industries, Asian Paints, Shriram Finance, Bharat Electronics, Infosys உள்ளிட்ட நிறுவன பங்குகளின் மதிப்பு உயர்ந்தன. Adani Enterprises, Adani Ports, UltraTech Cement, Sun Pharma, Bajaj Auto உள்ளிட்ட நிறுவன பங்குகளின் மதிப்பு பெரிதாக வீழ்ந்தன. ஆட்டோமொபைல், ஆற்றல்,மருந்து, எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறை பங்குகள் ஒன்று முதல் ஒன்றரை விழுக்காடு அளவுக்கு சரிவு காணப்பட்டது. தகவல் தொழில்நுட்பத்துறை, உலோகத்துறை பங்குகள் அரை முதல் 1 விழுக்காடு வரை உயர்ந்து முடிந்தன. கடந்த வாரத்தில் தொடர்ந்து உயர்ந்து வந்த ஆபரணத்தங்கம் விலை நேற்று சவரனுக்கு 960 ரூபாய் சரிந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 7080 ரூபாயாகவும், ஒரு சவரன் 56,640 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து கிராம் 98 ரூபாயாகவும், கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 3 ஆயிரம் ரூபாய் குறைந்து 98 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலைகளுடன் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரத்தையும் சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.