இந்த நாட்டில் தங்கம் விலை குறைந்தது..
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில்தான் இந்த தங்கம் விலை குறைப்பு அமலுக்கு வருகிறது. 11.664 கிராம் தங்கத்தை டோலா என்கிறார்கள், நேபாளத்தில் ஒரு டோலா தங்கத்தின் விலை இந்திய மதிப்பில் 15,900 ரூபாய் வரை சரிந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, இந்தியாவில் தங்கம் இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை நேபாள அரசு சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியாவை சுட்டிக்காட்டி, அதில் பாதி அளவு சுங்க வரியை நேபாள அரசு குறைத்துள்ளது. கடந்த ஜூலையில் இந்தியாவில் தங்கம் மீதான இறக்குமதி வரி 15 விழுக்காட்டில் இருந்து 6 விழுக்காடாக குறைக்கப்பட்டுத. இதே பாணியில் நேபாளிலும் தங்கம் மீதான இறக்குமதி வரி 20%–ல் இருந்து 10%ஆக குறைக்கப்பட்டது. குறைக்கப்பட்ட தங்கம் விலை நேபாளத்தில் கடந்த 25 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. தங்கம் விலையை திடீரென குறைத்தால் அது கடத்தல் தங்கத்தை குறைக்க முடியும் என்று கருதியதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நேபாள நகை வணிகர்கள் 8% வரியே போதுமானது என்று கூறுகின்றனர். ஆனால் அரசு அதனை 10 % ஆக நிர்ணயிக்க முடிவெடுத்துவிட்டது.தங்கத்தின் விலை குறைக்கப்பட்டதால் இந்தியாவில் இருந்து நிறைய பேர் சென்று அங்கு வாங்குவதை தடுக்கவே 10 விழுக்காடு வரை வரி விதிக்கப்பட்டது. எனினும் நேபாளத்தில் விலை குறைந்ததால், நகைக்கடைகளில் கூட்டம் அதிகளவில் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.