டிரம்ப் கூறும் 100 %கட்டணம் ஏன்?
அமெரிக்க அதிபராக அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்றவர் டொனால்ட் டிரம்ப். அதிரடியான செயல்பாடுகளுக்கு பெயர்பெற்றவரான இவர், பிரிக்ஸ் நாடுகளுக்கு ஒரு கட்டுப்பாட்டை விதித்துள்ளார். அதன்படி அமெரிக்க டாலருக்கு மாற்றாக வேறு நாடுகளின் கரன்சிகளை பயன்படுத்தினால் 100விழுக்காடு கட்டணம் கூடுதலாக விதிக்கப்படும் என்பதே அந்த கட்டுப்பாடு. 2009 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பிரிக்ஸ் அமைப்பில் தற்போது இந்தியா உட்பட 9 நாடுகள் இடம்பிடித்துள்ளன. பிரிக்ஸ் அமைப்பில் அமெரிக்கா இடம்பெறவில்லை. ரஷ்யா மற்றும் சீனா நாடுகள் அமெரிக்க டாலர்களுக்கு மாற்றாக வணிகம் செய்ய ஆயத்தமாகி வருகின்றன. இதனை கண்டிக்க நினைத்த டிரம்ப், பிரிக்ஸ் நாடுகளை கண்டித்துள்ளார். கடந்தாண்டு பிரிக்ஸ் உச்சிநாடுகள் மாநாட்டில் புதிய பகிர்வு கரன்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர்,அமெரிக்காவின் சில கொள்கைகள் டாலர் அடிப்படையிலான வணிகத்தை சிக்கலாக்கி வருகிறது என்றார். அமெரிக்காவின் இந்த முயற்சி கரன்சி மற்றும் பொருளாதார தேவைகளை பாதிக்கும் என்றும் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.