ஸ்னாக்ஸ் விலை உயரப்போகிறது…
மக்கள் விரும்பி சாப்பிடும் பிஸ்கட்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை மீண்டும் உயரப்போகிறது. அப்படி விலை உயரவில்லை அளவாவது கண்டிப்பாக குறைந்துவிடும் என்பதில் மாற்று கருத்து இருக்காது. பார்லே, பிரிட்டானியா, ஐடிசி நிறுவனங்கள் விலையை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கோதுமை, எண்ணெய் உள்ளிட்டவையின் விலை உயர்வால், பிஸ்கட்கள், சோப்புகள் உள்ளிட்ட பொருட்களின் விலை 7 % உயரப்போகிறது. குறிப்பாக அடுத்த காலாண்டுகளில் இவை நடக்கப்போகிறது. அடுத்த 2 காலாண்டுகளில் 3 முதல் 5%விலையேற்றம் இருக்கும் என்று பிரிட்டானியாவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிஸ்கட் மட்டுமின்றி பிரெட், பாலாடை கட்டி உள்ளிட்ட பல பொருட்கள் விலை உயரப்போகிறது. சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலை கடந்த 6 மாதங்களில் 13%விலை உயர்ந்துள்ளது. இது மட்டுமின்றி கடந்த செப்டம்பரில் சோயாபீன்ஸ் எண்ணெய், சமையல் எண்ணெய் உள்ளிட்டவற்றின் இறக்குமதி வரி 20%உயர்ந்துள்ளது சமையல் எண்ணெய் விலை மட்டுமின்றி சர்க்கரையின் விலையும் உயர்ந்துள்ளது. கடுமையான விலை உயர்வால் FMCGநிறுவனங்கள் விலைகளையும் உயர்த்தியுள்ளன. உணவுப்பொருட்கள் மட்டுமின்றி சோப்பு தயாரிப்பு நிறுவனமான சிந்தால் விலையை உயர்த்தியுள்ளது கோத்ரேஜ் நிறுவனம். பாமாயில் மற்றும் அது சார்ந்த பொருட்களின் விலை 20 முதல் 30% உயர்ந்துள்ளதால் விலையை உயர்த்தாமல் சில நேரங்களில் எடையை குறைத்துவிடுவதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.