பங்குச்சந்தைகளில் மிகப்பெரிய ஏற்றம்..
இந்திய பங்குச்சந்தைகள்,5 நாட்கள் சரிவுக்கு பிறகு, குறிப்பிடத்தகுந்த ஏற்றத்தை திங்கட்கிழமை கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 498 புள்ளிகள் உயர்ந்து, 78,540 புள்ளிகளில் வர்த்கம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, 165 புள்ளிகள் உயர்ந்து 23ஆயிரத்து 753 புள்ளிகளில் வணிகம் நிறைவுற்றது. . JSW Steel, ITC, Hindalco Industries, IndusInd Bank,Trent, உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து முடிந்தன. Hero MotoCorp, Maruti Suzuki, Nestle India, HCL Technologies, Bajaj Finservஆகிய நிறுவன பங்குகள் சரிவை கண்டன. வங்கி, எப்எம்சிஜி, உலோகம், ஆற்றல்துறை பங்குகள் அரை முதல் 1 விழுக்காடு ஏற்றம் கண்டன. ஊடகத்துறை பங்குகள் 0.4விழுக்காடு சரிந்தன. அதேநேரம் , Mankind Pharma, 360 ONE WAM, Coromandel International, Jupiter Life Line Hospitals, Zen Technologies, Pearl Global Industries,உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட நிறுவன பங்குகள், கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டன. திங்கட்கிழமை ஆபரணத்தங்கம் விலை மாற்றமின்றி ஒரு கிராம் 7100 ரூபாயாகவும், ஒரு சவரன் 56,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை மாற்றமின்றி 99 ரூபாயாகவும், கட்டி வெள்ளி விலை கிலோ 99ஆயிரம் ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலைகளுடன் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரத்தையும் சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.