பெரிய மாற்றமின்றி முடிந்த சந்தைகள்..

இந்திய பங்குச்சந்தைகள், வியாழக்கிழமை லேசான சரிவை கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 0.39 புள்ளிகள் சரிந்து, 78,472புள்ளிகளில் வர்த்கம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 22 புள்ளிகள் உயர்ந்து 23ஆயிரத்து 750 புள்ளிகளில் வணிகம் நிறைவுற்றது. Adani Ports, Shriram Finance, M&M, Maruti Suzuki, SBI Life Insuranceஉள்ளிட்ட நிறுவன பங்குகளின் மதிப்பு உயர்ந்தன. Titan Company, Asian Paints, Nestle, JSW Steel, Grasim Industriesஉள்ளிட்ட நிறுவன பங்குகளின் மதிப்பு பெரிதாக வீழ்ந்தன. ஆட்டோமொபைல், ஆற்றல்,மருந்துத்துறை , ரியல்எஸ்டேட் உள்ளிட்டதுறை பங்குகள் அதிகளவில் வாங்கப்பட்டன. உலோகத்துறை, ஊடகத்துறை பங்குகள்அதிகளவில் விற்கப்பட்டன. வியாழக்கிழமை ஆபரணத்தங்கம் விலை ஒரு கிராம் 25 ரூபாய் விலை உயர்ந்து 7125 ரூபாயாகவும், ஒரு சவரன் 57,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 100 ரூபாயாகவும், கட்டி வெள்ளி விலை கிலோ 1லட்சம் ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலைகளுடன் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரத்தையும் சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.