மன்மோகன் செய்த சிறப்பான சம்பவங்கள்..

இந்திய பொருளாதார மாற்றத்தின் கட்டமைப்பு நிபுணராக திகழ்ந்தவர் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங். கடந்தவாரத்தில் அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவர் கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் அளித்த பங்களிப்பு ஏராளம். 1991-ல் இந்திய அரசின் பொருளாதாரம் பெரிய சரிவை சந்தித்த போது, மன்மோகன்சிங், பல புதிய திட்டங்களை அறிவித்து பொருளாதார சரிவை மீட்டெடுத்தார். இறக்குமதி லைசன்ஸை நீக்கிய மன்மோகன் சிங், வரிகளை குறைத்து, ஏற்றுமதிக்கான மானியங்களை தூக்கி எரிந்தார். இதுதான் இந்திய பொருளாதாரம் வளர்ச்சியடைய முக்கிய புள்ளியாக அமைந்தது. தாராளமயமாக்கல், தனியார் மயப்படுத்துததல், உள்ளிட்ட அம்சங்களால் கவனம் ஈர்த்த மன்மோகன் சிங், வெளிநாட்டு முதலீடுகளை அதிகம் பெற்றதுடன், ஏற்றுமதியை அதிகரித்தார். பரஸ்பர நிதித்துறையை தனியார் மற்றும் கூட்டு நிறுவனங்கள் மூலம் தொடங்கி வைத்த மன்மோகன் சிங் , செபி இதற்கு ஒப்புதல் அளிக்க உதவினார். விவசாயத்துறையில் வேளாண் கடன்கள் 65ஆயிரம் கோடி ரூபாயை கடந்த 2009ஆம் ஆண்டு தள்ளுபடி செய்தார். இதன் மூலம் விவசாயிகளால் எளிதாக கடன் பெற முடிந்தது. தங்க நாற்கரை சாலைகள் திட்டம், ஐஐடிகளை அதிகரித்தது, மக்களுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. கல்வி உரிமை சட்டம், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், ஆதார் உள்ளிட்ட திட்டங்களை 2004 முதல் 2014 ஆம் ஆண்டுவரை காங்கிரஸ் ஆட்சிகாலத்தில்தான் கொண்டுவந்தார் மன்மோகன் சிங், திட்டங்கள் அதிகம் கொண்டுவந்தாலும், மன்மோகன் சிங்கின் அரசாங்கம் ஊழல் புகாரில் சிக்கியது. எனினும் அவர் மீது துளி கூட குற்றச்சாட்டுகள் இல்லை.