பெரிய மாற்றமின்றி முடிந்த சந்தைகள்..

இந்திய பங்குச்சந்தைகள் பெரிய மாற்றமின்றி வணிகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 10 புள்ளிகள் உயர்ந்து 74ஆயிரத்து 612 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 2 புள்ளிகள் குறைந்து 22ஆயிரத்து 545 புள்ளிகளாகவும் வர்த்தகம் முடிந்தது. வங்கிக்கடன்கள் மீதான ரிஸ்க் வெயிட்டை 125-ல் இருந்து 100 புள்ளிகளாக மத்திய அரசு குறைத்துள்ளது. இது வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலாக இருக்கிறது. Shriram Finance, Bajaj Finance, Bajaj Finserv, Sun Pharma, Hindalco Industries உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்தை பதிவு செய்தன. UltraTech Cement, Trent, Jio Financial, Bajaj Auto and Tata Motors நிறுவன பங்குகள் சரிவை கண்டன. GNFC, PVR INOX, Finolex Cables, Havells India, JBM Auto, Varun Beverages, GE Shipping, MMTC, Titagarh Rail Systems, Fine Organics, GSFC, Network 18, Sun TV Network, Chennai Petro, Tanla Platforms, Gujarat Gas, Shree Renuka Sugars, Adani Green Energy, Elgi Equipments உள்ளிட்ட460க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்குகள் கடந்த ஓராண்டில் இல்லாத வீழ்ச்சியை கண்டன. ஊடகம், ஆற்றல், ரியல் எஸ்டேட்துறை பங்குகள் அரை முதல் 1 முதல் 2 விழுக்காடு வரை சரிந்தன. இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு மேலும் 320 ரூபாய் குறைந்து 64 ஆயிரத்து 80 ரூபாயாக விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 106 ரூபாயாக விற்பனையாகிறது. கட்டி வெள்ளி விலை ஒரு கிலோ 1லட்சத்து ஆயிரம் ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலைகளுடன் நிலையான ஜிஎஸ்டி 3 விழுக்காடும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரத்தையும் சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்…