பங்குச்சந்தையில் மிகப்பெரிய அபாய எச்சரிக்கையா?

இந்திய பங்குச்சந்தைகளில் மிகப்பெரிய அளவுக்கு கடந்த சில மாதங்களாக சரிவு காணப்பட்டு வருகிறது. குறிப்பாக 22 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதலீட்டாளர்கள் தாங்கள் முதலீடு செய்த தொகைகளை வெளியே எடுத்து வருகின்றனர். அதாவது 41.1% முதலீட்டாளர்கள் தங்கள் தொகைகளை வெளியே எடுத்துள்ளனர். தேசிய பங்குச்சந்தையில் மட்டும் 96 அடிப்படை புள்ளிகளும், கடந்த 3 மாதங்களில் 167 அடிப்டை புள்ளிகளும் குறைந்துள்ளன. இதனால் முதலீட்டாளர்களுக்கு புரோமோட்டர்கள் ஆலோசனைகளை அள்ளி வீசி வருகின்றனர். கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் இந்த போக்கு குறைந்து வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 2019 முதல் 2021 காலகட்டம் வரை அதிக விற்பனை நடந்துள்ளது. இந்த காலகட்டத்தில் அதிக முதலீட்டாளர்களும் பங்குச்சந்தைகளுக்குள் உள்ளே வந்துள்ளனர். சிப்ளா, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் அதிகளவு முதலீடுகள் குவிந்த நிலையில், தற்போது அந்நிறுவன பங்குகள் மிகப்பெரிய சரிவை கண்டுள்ளன. சிப்ளா நிறுவன பங்குகள் கடந்த 3 காலாண்டுகளாக 428 அடிப்படை புள்ளிகள் சரிந்துள்ளன. அதே நேரம் டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள் 379 புள்ளிகள் வீழ்ந்துள்ளன. பார்தி ஏர்டெல், மஹிந்திரா அன்ட் மஹிந்த்ரா, டிசிஎஸ், ஆகிய நிறுவனங்களிலும் பெரிய சரிவு காணப்பட்டது. இந்த இக்கட்டான காலகட்டத்தில் புரோமோட்டர்கள் சரியான ஆலோசனைகளை வழங்குவது அவசியம் என்ற அடிப்படையில் தற்போதைய சரிவு சமாளிக்கக்கூடியதுதான் என்றும், பெரிய உயர்வு வரும் வரை தாங்கிக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். புரோமோட்டர்கள் தங்கள் பங்குகளை விற்று வரும் அதே நேரம் நிறுவனங்கள் இந்த பங்குகளில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன. தனிப்பட்ட முதலீட்டாளர்கள் முதலீடு என்பது கடந்த காலகட்டங்களில் தெளிவாக வலுவாக இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 6 ஆண்டுகளில் இந்த விகிதம் தொடர்ந்து உயர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது. உலகளாவிய பொருளாதார சமநிலையற்ற சூழல், மத்திய வங்கிகள் கொள்கைகளை மாற்றிக்கொண்டே இருப்பது உள்ளிட்ட நேரங்களில்தான் முதலீட்டாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
குறிப்பிட்ட ஒரு தொழில்நுட்பத்தை மட்டும் நம்பி முதலீடுகள் செய்யக்கூடாது என்ற அறிவுறுத்தலையும் நிபுணர்கள் அளித்துள்ளனர்.