கார்களைவிட்டுவிட்டு பீரங்கி தயாரிக்கும் பிரபல நிறுவனம்..

ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனம் ஃபோக்ஸ்வாகன், இந்த நிறுவனம் ஐரோப்பாவில் பிரபல கார் நிறுவனமாக திகழ்கிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்தின் கார்களுக்கு மவுசு குறைந்து வருகிறது. இதனால் ஒரு அதிரடி முடிவெடுத்துள்ள ஃபோக்ஸ் வாகன் தலைமை கார் தயாரிப்பு ஆலையில் இனி பீரங்கி தயாரிக்கலாம் என்று திட்டமிட்டுள்ளது. ஆலோசனைவழங்கவும், ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் தயாராக இருப்பதாக அந்நிறுவன மூத்த அதிகாரி கூறியுள்ளார். சீன தயாரிப்புகளாலும், உற்பத்தி செலவுகள் அதிகரிப்பாலும் தங்கள் வருவாய் குறைந்திருப்பதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் நிகர லாபம் 30%க்கும் மேல் குறைந்துள்ளது. உரிய விற்பனை இல்லாத நிலையில் ஜெர்மணியில் இருந்து மட்டும் 2030 ஆம் ஆண்டுக்குள் 35,000 பேரை பணி நீக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளது ஃபோக்ஸ்வாகன் நிறுவனம். ஏற்கனவே ராணுவ டாங்குகளை தயாரித்து வந்த ஃபோக்ஸ் வாகன் நிறுவனத்துடன் சில டாங்குகள் தயாரிப்பு நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. 2ஆம் உலகப்போரின்போது நாசி படைகளுக்கு ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் டாங்குகளையும், வெடிகுண்டுகளையும் உற்பத்தி செய்து தந்தது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது வரிகளை சுமத்தி வரும் டொனால்ட் டிரம்ப்பால்தான் ஜெர்மனியிலும் வணிகம் சரிந்ததாக கூறப்படுகிறது. ஓஸ்னாபிரூயக் என்ற பகுதியில் உள்ள ஃபோக்ஸ் வாகன் ஆலையை ரெயின்மெட்டல் என்ற தளவாட தயாரிப்பு நிறுவனம் எடுத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது. ஜெர்மனியின் பாதுகாப்பு மற்றும் தளவாட உற்பத்தியில் வேலைவாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. 2022-ல் மட்டும் 3.87 லட்சம் பேருக்கு அந்நிறுவனம் வேலைவாய்ப்புகளை அளித்துள்ளது.