22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

இந்திய கெமிகல் ஏற்றுமதியாளர்களுக்கு மோசமான செய்தி..

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மீண்டும் வர்த்தகப் போர் நடக்கும் நிலையில் இதில் இந்தியர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20 % கூடுதல் வரியை அமெரிக்கா விதிக்க திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த அறிவிப்பால் சீனப்பொருட்கள் அமெரிக்காவுக்கு பதிலாக மற்ற நாடுகளுக்கு அனுப்பப்படும், அந்த நேரத்தில் இந்தியாவின் விலையை விட சீனா குறைவான விலைக்கு ரசாயனங்களை அளிக்கும் என்பதால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது.
2023ஆம் ஆண்டு தரவுகளின்படி இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு 2.9 பில்லியன் அளவுள்ள ரசாயனங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. அமெரிக்கா மட்டுமின்றி பிரேசில், நெதர்லாந்து, சவுதி அரேபியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் இந்தியா ரசாயனங்களை அனுப்பி வருகிறது. வெளி சந்தையில் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு சிக்கல் எழும் நிலையிலும், சில இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு தொடர்ந்து ரசாயனங்களை ஏற்றுமதி செய்ய வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அதிகம் ரசாயனங்களை அனுப்பி வைக்கும் நிறுவனமாக ஆர்தி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் திகழ்கிறது. மொத்த ஏற்றுமதியில் 24%பங்களிப்பை இந்த நிறுவனம் செய்கிறது.
இந்திய ரசாயன ஏற்றுமதி என்பது 2026-ல் 300 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்டதாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகப் போரில் இந்தியா லாபம் கண்டது. சீனாவிடம் இருந்து வாங்குவதற்கு பதிலாக அமெரிக்கா, இந்தியாவிடம் இருந்து 73 பில்லியன் அமெரிக்க டாலர்களை கூடுதலாக வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *