முக்கிய நபர் விலகலால் மருந்து சந்தை சரிவு..

அமெரிக்க மருந்து நிறுவன பங்குகள் கடந்த திங்கட்கிழமை கடுமையாக விழுந்தன. இதற்கு பிரதான காரணமாக உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் மூத்த அதிகாரியான பீட்டர் மார்க்ஸ் பதவி விலகியதே காரணமாக கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது நிர்வாகத்தின் கீழ் இருக்கும் சுகாதாரத்துறை யை பழுதுநீக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மருந்து மற்றும் உயிரி துறை பங்குகள் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. கடந்த முறை அதிபராக டிரம்ப் இருந்தபோது, மார்க்ஸ் மிகத்தீவிரமாக செயல்பட்டு கோவிட் 19 மருந்துகளை உருவாக்க உதவினார். வரும் 5 ஆம் தேதி முதல் மார்க்ஸ் தனது பதவியில் இருக்க மாட்டார் என்று ராஜினாமா கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மார்க்ஸ் வெளியேறியதால் அமெரிக்க பங்குச்சந்தையில் எஸ் அன்ட் பி 500 பங்குகள் 4.9விழுக்காடு விழுந்தன. இந்தாண்டில் மட்டும் 6விழுக்காடு சரிவை இந்த துறை இழக்கிறது. மார்க்ஸ் வெளியேறிய நிலையில், மருந்துத்துறையில் முதலீடு செய்ய விரும்புவோர் தயக்கம் காட்டி வருகின்றனர். மருந்து தயாரிப்பு நிறுவனமான நோவாவாக்ஸ், பயோ என்டெக் நிறுவன பங்குகள் அதிகபட்சமாக 8 விழுக்காடு வரை சரிவை கண்டன. டாய்ஷா ஜீன் தெரப்பி நிறுவன பங்குகள் 30 விழுக்காடு வரை சரிந்தன.
சாலிட் பயோசைன்ஸ் நிறுவன பங்குகள் 14 விழுக்காடு விழுந்தன. ஏற்கனவே எப்டிஏவின் மருந்து தரம் பார்க்கும் பிரிவில் இருந்த பட்ரிசியா கவசோனி 2 மாதங்களுக்கு முன்பு பதவி விலகிய நிலையில், மார்க்ஸும் வெளியேறியுள்ளார். மார்க்ஸுக்கு மாற்றாக வேறு யாரை நியமிக்கப்போகிறார்கள் என்ற கேள்வியும் உலகளவில் எழுந்துள்ளது.