அமெரிக்க பங்குச்சந்தையில் ரோலர் கோஸ்டர்..

அமெரிக்க பங்குச்சந்தைகளில் புதன்கிழமை பெரிய முன்னேற்றம் காணப்பட்டது. டவ் ஜோன்ஸ் பங்குச்சந்தை 178 புள்ளிகள் உயர்ந்தது. எஸ்அன்ட் பி 500 பங்குகள் 27 புள்ளிகளும், நாஸ்டாக் பங்குச்சந்தைகள் 205 புள்ளிகளும் உயர்ந்தன. நாளுக்கு நாள் ஏற்ற இறக்கம் இருக்கும் என்ற நிலை மாறி ஒவ்வொரு மணிநேரமும் பரவலாக உலக பொருளாதாரத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. சீனப்பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் 104%வரியை விதித்தார், இதற்கு பதிலடி தரும் வகையில், அமெரிக்க பொருட்களுக்கு சீனா 84%வரியை விதித்துள்ளது.
23 பில்லியன் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் அறிவிப்பையும் ஐரோப்பிய ஒன்றியம் புதன்கிழமை வெளியிட்டது. மணிக்கு ஒரு முறை மாற்றங்களை சந்தித்து வரும் நிலையில் ஒவ்வொரு அசைவுகளையும் கவனிப்பதில் சிரமமாக இருப்பதாக முதலீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். டெல்டா ஏர், வால்மார்ட் நிறுவனங்கள் இந்த பொருளாதார நிலையற்ற சூழலை விமர்சித்துள்ளன. அமெரிக்க அதிபரின் புதுப்புது அறிவிப்புகளால் அமெரிக்காவுக்குள் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இன்னும் அதிக மருந்து தயாரிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
ஐரோப்பிய மற்றும், ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய சரிவு காணப்பட்டது. லண்டனின் பங்குச்சந்தைகள் 3 விழுக்காடும், டோக்கியோ பங்குச்சந்தைகள் 4 விழுக்காடும் சரிந்துள்ளன. பாரிஸ் பங்குச்சந்தைகள் 3.3%குறைந்தன.
சீனப் பங்குச்சந்தைகள் மட்டும் வழக்கத்துக்கு மாறாக 0.7%, ஹாங்காங் பங்குச்சந்தைகள் 1.3%ஏற்றம் கண்டுள்ளன.