பேங்க் பஜார் பங்குகளை வாங்கும் முத்தூட் ஃபின்கார்ப்..
நிதி சேவைகளை வழங்கி வரும் முத்தூட் ஃபின்கார்ப் நிறுவனம், பேங்க் பஜார் என்ற நிறுவனத்தின் பங்குகளில் 1 விழுக்காட்டை 15 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேங்க் பஜார் நிறுவனம் தனது டிஜிட்டல் தளங்களை மேம்படுத்தும் வகையில் இந்த 1 விழுக்காடு பங்குகளை விற்றுள்ளது. பேங்க் பஜார் நிறுவன பங்குகள் ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பு கொண்டவை. இந்த நிலையில் தங்க நகைக் கடன் துறையில் டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியில் முத்தூட் ஃபின்கார்ப் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. டிஜிட்டல் தரவு மேலாண்மை, டிஜிட்டல் மார்கெட்டிங், கடன் விவரங்கள் உள்ளிட்டவற்றை பேங்க் பஜார் செய்யும், அதே நேரம் தங்க நகைக்கடன்கள் தொடர்பான அடிப்படை தகவல்கள் முத்தூட்ஃபின்கார்ப் நிறுவனம் மேற்கொள்ளும். மே அல்லது ஜூன் மாத இறுதியில் டிஜிட்டல் வடிவில் தங்க நகை கடன் வாங்குவது குறித்து வாடிக்கையாளர்கள் தரவுகளை பெறலாம் என்று கூறப்படுகிறது. முத்தூட் ஃபின்கார்ப் நிறுவனத்திடம் 2 டசனுக்கும் அதிகமான சேவைகள் பொருட்கள் உள்ளன. அந்த நிறுவனத்துக்கு 3 ஆயிரத்து 700 கிளைகள் உள்ளன. இந்த நிறுவனம் தங்கத்தை அடகாக பெற்றுக்கொண்டு 26,ஆயிரம் கோடி ரூபாய் கடனை வழங்கியுள்ளது. தங்கள் நிறுவனத்தை மேம்படுத்த 55 கோடி ரூபாய் உள் நிதியும் முத்தூட் ஃபின்கார்ப் நிறுவனம் ஒதுக்க இருக்கிறது. 24 நிதியாண்டில் கோ பிராண்ட் கிரிடிட் கார்டுகள் 62%உயர்ந்துள்ளதாக கூறும் பேங்க்பஜார் அதிகாரிகள், தங்கள் நிறுவனத்தின் கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதமான சிஏஜிஆர் 46 விழுக்காடு உயரந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். இந்த லாபம் இந்தாண்டும் தொடரும் என்று பேங்க் பஜார நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதில் ஷெட்டி தெரிவித்துள்ளார். 6 கோடியே 70 லட்சம் வாடிக்கையாளர்களை தங்கள் நிறுவனம் கொண்டிருப்பதாகவும் அந்த நிறுவனம் கூறுகிறது.
