Karnataka Bank : சூப்பர் அறிவிப்பு !!
கர்நாடகா வங்கி அதன் டிஜிட்டல் வங்கி உள்கட்டமைப்பை நவீனமயமாக்க ஐபிஎம் உடன் கூட்டு சேர்ந்து, ஒரு பாதுகாப்பான பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (ஏபிஐ) தளத்தை உருவாக்கி, அதன் டிஜிட்டல் தடத்தை மேம்படுத்துகிறது.
இதம் மூலம் கர்நாடக வங்கி, அதன் செயல்பாட்டு செலவைக் குறைத்து, அதே வேளையில் வங்கியின் டிஜிட்டல் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நவீன, பாதுகாப்பான மற்றும் விரிவுபடுத்தக்கூடிய ஏபிஐ தளத்தை உருவாக்க போவதாக தெரிவித்துள்ளது.
“இது எங்கள் டிஜிட்டல் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லை குறிக்கிறது,” என்று கர்நாடக வங்கியின் தலைமை தகவல் அதிகாரி வெங்கட் கிருஷ்ணன் கூறினார். ஐபிஎம் அதன் மென்பொருள் தொகுப்பான ஐபிஎம் கிளவுட் பேக்கை,Red Hat OpenShift இல் ஒருங்கிணைப்புக்குப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. Red Hat OpenShift என்பது தனியார் மற்றும் பொது கிளைவுட் சேவைகள் மற்றும் தரவு மையங்களில், பயன்பாடுகளை உருவாக்க நிறுவனங்களுக்கு உதவும் ஒரு தளமாகும்.
மேம்படுத்தப்பட்ட ஏபிஐ உள்கட்டமைப்பு, வங்கியின் டிஜிட்டல் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது. அதே நேரத்தில் சேவைகளின் விரிவுபடுத்தலை 50% மேம்படுத்துகிறது மற்றும் செயல்பாட்டு செலவுகளை 30% குறைக்கிறது.
“கர்நாடக வங்கியின் நவீனமயமாக்கல் திட்டம், அறிவார்ந்த ஆட்டோமேஷன் மற்றும் ஒருங்கிணைந்த அமைப்புகள் பிரச்சனைகளை குறைத்து, செயல்திறனை அதிகரித்து, பாதுகாப்பான, நம்பகமான டிஜிட்டல் சேவைகளை பெரிய அளவில் வழங்குவதை துரிதப்படுத்தும்” என்று ஐபிஎம் இந்தியா மற்றும் தெற்காசியாவின் தொழில்நுட்பத் துணைத் தலைவர் விஸ்வநாத் ராமசாமி கூறினார்.
இந்த திட்டத்தின் செயல்படுத்தலை Fyrii மற்றும் IBM இன் நிபுணர் ஆய்வகங்கள் இணைந்து வழிநடத்தின. இந்த திட்டம் கர்நாடக வங்கியின் பரந்த டிஜிட்டல் உருமாற்றத் திட்டங்களான Startup @100இன் ஒரு அங்கம் ஆகும்.
1924-இல் மங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு நிறுவப்பட்ட கர்நாடக வங்கி, இந்தியாவில் ஒரு ‘A’ வகுப்பு ஷெட்டியூல்ட் வங்கியாகும். இந்த ஆண்டு நிலவரப்படி இந்த வங்கி 22 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் 957 கிளைகள், 1,188 ATMகள் மற்றும் பண மறுசுழற்சி மையங்கள் மற்றும் 588 மின்-லாபிகள்/ மினி மின்- லாபிகளின் வலையமைப்பை கொண்டுள்ளது

Good experience