TATA MOTORS : ஹாப்பி நியூஸ்..!!
டாடா மோட்டார்ஸின் வணிக வாகன பங்குகள் தற்போதைய நிலைகளிலிருந்து 16% வரை உயரக்கூடும் என்று இன்க்ரெட் ஈக்விட்டிஸ் தெரிவித்துள்ளது. ரூ.513 விலை இலக்கை நிர்ணயித்து அதற்கு நான்கு முக்கிய காரணிகளை கோடிட்டுக் காட்டியுள்ளது.
ஏப்ரல் 2024 மற்றும் ஜூலை 2025க்கு இடையில் ஆறு காலாண்டுகளுக்கு மேலாக நீடித்த சரிவுக்குப் பிறகு வணிக வாகன (CV) துறையின் வளர்ச்சி வேகம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. செப்டம்பர் 2025 இல் சரக்கு மற்றும் சேவை வரி (GST) விகிதக் குறைப்பு சிறிய போக்குவரத்து சேவை நிறுவனங்களுக்கான வணிகத்தை கணிசமாக மேம்படுத்தி, புதிய டிரக் தேவையில் மறுமலர்ச்சியைத் தூண்டியுள்ளது.
டயர்கள், லூப்ரிகண்டுகள் மற்றும் உதிரி பாகங்களின் விலை குறைப்பினால் ஏற்படும் சேமிப்பு சிறிய லாரி ஆபரேட்டர்களுக்கு பணப்புழக்கத்தை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், வாகன விலைகள் குறைப்பினால், கடன்களை திருப்பிச் செலுத்தும் காலங்களும் குறையும். கூடுதலாக, வட்டி விகித குறைப்பு மற்றும் தொழில்துறை உற்பத்தி குறியீட்டு (IIP) உயர்வு போன்ற நடுத்தர கால காரணிகள், FY28 வரை தேவை மீட்சியைத் தக்கவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் இந்த மீட்சியிலிருந்து பயனடையவும், CV பிரிவில் அதன் சமீபத்திய சந்தைப் பங்கு இழப்புகளை மாற்றியமைக்கவும் சிறந்த நிலையில் இருப்பதாகக் கருதப்படுகிறது. சரிவின் போது சந்தைப் பங்கு இழப்பு, 16 டன்களுக்குக் குறைவான லாரிகளில் அதிகமாகக் காணப்பட்டது. இந்நிலையில், விற்பனையில் ஏற்படும் அதிகரிப்புகள், டாடா மோட்டர்ஸ் இழந்த பங்கை மீண்டும் பெற ஒரு அர்த்தமுள்ள வாய்ப்பை வழங்குகின்றன.
டாடா மோட்டார்ஸின் CV வாகன விற்பனை FY26 இன் முதல் பாதியில் ஆண்டுக்கு ஆண்டு 3% வளர்ந்தது. இது இந்தத் துறையின் வளர்ச்சிக்கு சற்றுக் குறைவு. இருப்பினும், தேவை மேம்படும்போது, இந்நிறுவனம் தொழில்துறையை விட சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டுக்கு சுமார் 900,000 யூனிட்கள் அளவிலான உற்பத்தி திறன் இதற்கு உதவும். 26-28 நிதியாண்டில், டாடா மோட்டார்ஸின் CV அளவுகள் 12% CAGR இல் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஒட்டுமொத்த CV துறையின் வளர்ச்சி சுமார் 11% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
