22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
உள்நாட்டு செய்திகள்

சூப்பர் அறிவிப்பு வெளியிட்ட Microsoft

2026-க்குப் பிறகும் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய டேடா மைய உள்கட்டமைப்பில் தொடர்ந்து முதலீடு செய்யும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்திய கிளையின் தலைவர் புனீத் சந்தோக் கூறியுள்ளார். மேலும் மதிப்பு கூட்டப்பட்ட தீர்வுகளை உருவாக்க செயற்கை நுண்ணறிவு (AI) பொறியாளர்களை பணியமர்த்துவது தொடரும் என்றும் கூறினார்.

“நடப்பு ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டில், எங்கள் $300 கோடி முதலீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, எங்கள் ஹைதராபாத் டேடா மையம் ஜூன் 2026-க்குள் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
மும்பை, புனே மற்றும் சென்னையில் உள்ள எங்கள் டேட்டா மைய மையங்கள், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் உள்ள இரண்டு ஜியோ-அஸூர் பிராந்தியங்கள் (ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுடன்) ஆகியவற்றின் தொடர்ச்சி இது” என்று புனீத் சந்தோக் கூறினார்.

“எங்கள் அனைத்து தரவு மையங்களும் AI-செயல் திறன் கொண்டவை. இதுவரை நாங்கள் இவற்றில் தான் முதலீடு செய்துள்ளோம். ஆனால், எங்கள் முதலீடுகள் தொடர்சியற்றவை அல்ல ; அவை கட்டமைப்பு ரீதியானவை. நாங்கள் தொடர்ந்து அதிக முதலீடு செய்வோம்” என்றார்.

மைக்ரோசாப்டின் உலகளாவிய தலைமை நிர்வாகி சத்யா நாதெல்லா டிசம்பர் 10-12 தேதிகளில் இந்தியா வர உள்ளார்.

நாதெல்லா தனது வருகையின் போது AI உள்கட்டமைப்பு தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் 14 அன்று, கூகுள், அதன் இந்திய கூட்டாளிகளான அதானி குழுமம் மற்றும் ஏர்டெல் ஆகியவற்றுடன் இணைந்து, ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் 1 ஜிகாவாட் (GW) AI டேடா மையத்தை உருவாக்க, 1500 கோடி டாலர் முதலீட்டை அறிவித்திருந்தது. இது பற்றி கருத்து தெரிவிக்க புனீத் சந்தோக் மறுத்து விட்டார்.

AI தொழில்நுட்பம் பயன்பாடு அதிகரிப்பு, இந்தியாவில் மைக்ரோசாப்டின் நிகர பணியமர்த்தலைக் குறைக்காது என்று கூறியுள்ளார். “இந்தியாவில் ஏற்கனவே 22,000 AI பொறியாளர்கள் உள்ளனர், மேலும் நாங்கள் தொடர்ந்து பணியமர்த்துகிறோம். நாங்கள் ஆட்களை வேலைக்கு அமர்த்தும் போது, நாங்கள் தொடர்ந்து AI திறன்களைத் தேடுகிறோம். எங்களின் ஊழியர்களின் AI திறன்களையும் வளர்த்தெடுக்கிறோம். ஒவ்வொரு மாதமும் ஒரு நாளை இந்த திறமையில் கவனம் செலுத்த நாங்கள் அர்ப்பணிக்கிறோம்” என்று கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *