22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
உள்நாட்டு செய்திகள்

டாடா மோட்டார்ஸின் காலாண்டு நிகர லாபம் 48% சரிவு

டாடா மோட்டார்ஸ் லிமிடெட் (TMCV) நிறுவனம், டிசம்பர் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் 48% சரிவைச் சந்தித்து, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய ரூ. 1,355 கோடியுடன் ஒப்பிடுகையில், ரூ. 705 கோடியாகப் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய், Q3FY26 காலாண்டில் ரூ. 21,847 கோடியாக இருந்தது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய ரூ. 18,819 கோடியுடன் ஒப்பிடுகையில் 16% அதிகமாகும்.

புதிய தொழிலாளர் சட்டங்கள் காரணமாக ஏற்பட்ட ரூ. 603 கோடி பாதிப்பு, நிறுவனத்தை இரண்டாக பிரித்த நடவடிக்கையினால் ஏற்பட்ட ரூ. 962 கோடி மற்றும் கையகப்படுத்துதல் செலவான ரூ. 82 கோடி உள்ளிட்ட அசாதாரணச் செலவுகளையும் பதிவு செய்துள்ளது. இந்த செலவுகள் மற்றும் பிற செலவுகளின் தாக்கம், நிதிநிலை அறிக்கைகளில் ரூ. 1,500 கோடியாகவும், ஒருங்கிணைந்த நிதிநிலை அறிக்கைகளில் ரூ. 1,600 கோடியாகவும் இருந்தது என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

Q2FY26 காலாண்டில் இந்நிறுவனம் ரூ. 867 கோடி நிகர நஷ்டத்தைப் பதிவு செய்திருந்தது. டாடா கேபிட்டலில் சமீபத்தில் பட்டியலிடப்பட்ட முதலீடுகளில் ஏற்பட்ட சந்தை மதிப்பு இழப்பான ரூ. 2,000 கோடி தான் இதற்கு காரணம்.

ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இருந்த ரூ. 18,585 கோடியுடன் ஒப்பிடுகையில், காலாண்டுக்குக் காலாண்டு அடிப்படையில் மொத்த வருவாய் 18% வளர்ச்சி கண்டுள்ளது.

வட்டி, வரிகள், தேய்மானம் மற்றும் கடன்தீர்ப்பு ஆகியவற்றிற்கு முந்தைய வருவாய் (EBITDA) விகிதம் 12.5% ஆக இருந்தது. இது ஆண்டுக்கு ஆண்டு 30 அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்துள்ளது. அதே சமயம், வட்டி மற்றும் வரிகளுக்கு முந்தைய வருவாய் (EBIT) விகிதம் 10.4% ஆக இருந்தது.

இந்தக் காலாண்டிற்கான வரிக்கு முந்தைய லாபம் ரூ. 2,600 கோடியாக இருந்தது. டிசம்பர் 31, 2025 நிலவரப்படி, நிறுவனம் ரூ. 6,100 கோடி நிகர ரொக்க உபரியுடன் இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *