Latest:
₹1,800 கோடி முதலீட்டில் வயர்கள், கேபிள்கள் உற்பத்தியை துவங்கும் அல்ட்ராடெக் சிமெண்ட்மெர்க்கின் புற்றுநோய் மருந்தின் பயோசிமிலர் பதிப்பை அமெரிக்கச் சந்தையில் அறிமுகப்படுத்தும் சிப்லாஷெல் ஒப்பந்தத்திற்காக ஆதித்யா பிர்லா குழுமத்திற்குத் ரூ. 24,000 கோடி வங்கிக் கடன்கென்யாவில் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறுத்த அதிபர் ரூட்டோ உத்தரவுசொந்த வெற்றிக்கு பலியாகியுள்ள SIP-கள் - ஒரு நம்பகமான முதலீட்டுத் தேர்வுSIPs - A Trusted Investment Option - Limited by Its Own Growthபிரதமர் மோடியின் வேண்டுகோளினால் செப்டம்பரில் தங்க இறக்குமதி 15% சரிய வாய்ப்புCAS நடைமுறைப்படுத்தலால் F&O வர்த்தக மதிப்பு ₹347 லட்சம் கோடியாக சரிவுNRTT பங்கு பரிமாற்றம் தொடர்பாக அரசிடம் இருந்து டாடா டிரஸ்ட்ஸ்க்கு ஒப்புதல்AI மூலம் எரிசக்தி வணிகத்தில் வாய்ப்புகள் உள்ளதாக கருதும் பெர்க்ஷயர் CEO₹1,800 கோடி முதலீட்டில் வயர்கள், கேபிள்கள் உற்பத்தியை துவங்கும் அல்ட்ராடெக் சிமெண்ட்மெர்க்கின் புற்றுநோய் மருந்தின் பயோசிமிலர் பதிப்பை அமெரிக்கச் சந்தையில் அறிமுகப்படுத்தும் சிப்லாஷெல் ஒப்பந்தத்திற்காக ஆதித்யா பிர்லா குழுமத்திற்குத் ரூ. 24,000 கோடி வங்கிக் கடன்கென்யாவில் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறுத்த அதிபர் ரூட்டோ உத்தரவுசொந்த வெற்றிக்கு பலியாகியுள்ள SIP-கள் - ஒரு நம்பகமான முதலீட்டுத் தேர்வுSIPs - A Trusted Investment Option - Limited by Its Own Growthபிரதமர் மோடியின் வேண்டுகோளினால் செப்டம்பரில் தங்க இறக்குமதி 15% சரிய வாய்ப்புCAS நடைமுறைப்படுத்தலால் F&O வர்த்தக மதிப்பு ₹347 லட்சம் கோடியாக சரிவுNRTT பங்கு பரிமாற்றம் தொடர்பாக அரசிடம் இருந்து டாடா டிரஸ்ட்ஸ்க்கு ஒப்புதல்AI மூலம் எரிசக்தி வணிகத்தில் வாய்ப்புகள் உள்ளதாக கருதும் பெர்க்ஷயர் CEO

உள்நாட்டு செய்திகள்

₹1,800 கோடி முதலீட்டில் வயர்கள், கேபிள்கள் உற்பத்தியை துவங்கும் அல்ட்ராடெக் சிமெண்ட்

ஆதித்யா பிர்லா குழுமம் அதன் ‘அல்ட்ராவோல்ட்’ எனும் வயர்கள் மற்றும் கேபிள்கள் வணிகத்தைத் தொடங்குவதாக அறிவித்தது. ₹1,800 கோடி முதலீட்டில் தொடங்கப்படும் அல்ட்ராவோல்ட், உற்பத்தித் திறனின் அடிப்படையில் வயர் பிரிவில் நாட்டின் இரண்டாவது பெரிய நிறுவனமாகத் திகழும் என்று அக்குழுமம் தெரிவித்துள்ளது.

குழுமத்தின் முதன்மை நிறுவனமான அல்ட்ராடெக் சிமெண்டின் கீழ் செயல்படவுள்ள அல்ட்ராவோல்ட், ஒரு பெரிய தேசிய அளவிலான பிராண்டை உருவாக்கி, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இத்துறையில் முதல் இரண்டு நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ இலக்கு நிர்ணயித்துள்ளது.

வயர்கள் மற்றும் கேபிள்கள் சந்தையில் அல்ட்ராடெக் நுழைவது, அதன் கட்டுமானத் தீர்வுகள் உத்திக்கு ஏற்ப, சாம்பல் நிற சிமெண்ட், ரெடி-மிக்ஸ் கான்கிரீட், கட்டுமானப் பொருட்கள் மற்றும் வெள்ளை சிமெண்ட் ஆகியவற்றைத் தாண்டி கட்டுமான மதிப்புச் சங்கிலியில் அதன் பங்களிப்பை விரிவுபடுத்துகிறது. மேலும், வீடு கட்டுதல், உள்கட்டமைப்பு மற்றும் மின்மயமாக்கல் ஆகிய துறைகளில் வளர்ந்து வரும் வாய்ப்புகளில் ஆழமாகப் பங்கேற்கவும் இது அல்ட்ராடெக்கிற்கு உதவுகிறது என்று குழுமம் குறிப்பிட்டுள்ளது.

7,200 கோடி டாலர் மதிப்புள்ள ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, “இந்தியாவின் அடுத்தகட்ட வளர்ச்சியில் வயர்கள் மற்றும் கேபிள்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவை இந்தியப் பொருளாதாரத்தின் மூன்று முக்கியப் போக்குகளான நகரமயமாக்கல், மின்மயமாக்கல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவற்றின் சங்கமத்தில் அமைந்துள்ளன. அடுத்த பத்தாண்டுகளில் 10 கோடிக்கும் அதிகமான புதிய வீடுகள், விரிவடையும் எரிசக்தி உள்கட்டமைப்பு மற்றும் தரவு மையங்களின் (data centres) விரைவான வளர்ச்சி ஆகியவை இத்துறையின் வளர்ச்சியைத் தூண்டவுள்ளன. தயாரிப்பு, அதன் அடிப்படை கூறுகள் மற்றும் அது சார்ந்த சூழலமைப்பு (ecosystem) குறித்த ஆழமான புரிதலே எங்களின் தனித்துவமான பலமாக உள்ளது” என்கிறார்.

அவர் மேலும் கூறுகையில், “சமீப காலங்களில், வெற்றிகரமான புதிய வணிகங்களை உருவாக்குவது குழுமத்தின் அடையாளத்தின் (DNA) முக்கியப் பகுதியாகவும், மற்றவர்களிடமிருந்து தனித்துத் தெரிவதற்கான முக்கிய வழியாகவும் மாறியுள்ளது. புதிய முயற்சிகளுக்கான தளத்தையும் உந்துசக்தியையும் வழங்கும் அமைப்பாகவே நான் ஆதித்யா பிர்லா குழுமத்தைப் பார்க்கிறேன்” என்றார்.

கடந்த மூன்றாண்டுகளில் குழுமம் மேற்கொள்ளும் நான்காவது புதிய வணிக முயற்சியாக ‘அல்ட்ராவோல்ட்’ அமைகிறது. இதற்கான பிராண்ட் தூதராக ஷாருக்கான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *