1.8பில்லியன் டாலர் டிவிடண்ட்ஸ் கிடைக்கும்..
வரும் ஏப்ரல் மாதம் முதல் மத்திய அரசு வங்கிகளில் 2 பில்லியன் அளவுக்கு டிவிடண்ட்ஸ் கிடைக்கும் என்று நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2014-ல் பிரதமராக மோடி ஆட்சிப்பொறுப்பேற்றதில் இருந்து வங்கி கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மிகவும் மோசமான நிலையில் உள்ள மத்திய அரசு வங்கிகளை வலுவாக உள்ள வங்கிகளுடன் இணைக்கும் நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன. இது மட்டுமின்றி, திவால் நிறுவனங்களில் இருந்து பணத்தை மீட்பதற்கான சட்டங்களும் கடுமையாக்கப்பட்டுள்ளன. வரும் நிதியாண்டில் மட்டும் 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு டிவிடண்ட்ஸ்கிடைக்கும் என்றும் இது நடப்பு நிதியாண்டில் இந்த அளவு 138 பில்லியன் ரூபாயாக இருப்பதாகவும், அடுத்த நிதியாண்டில் 8.7விழுக்காடு அதிகரிக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியின் லாபம் மட்டும் 12 பில்லியன் அமெரிக்க டாலர்களாக நடப்பு நிதியாண்டில் இருக்கிறது. 12 பொதுத்துறை நிறுவனங்களின் லாபம் மட்டும் 980 பில்லியன் ரூபாயாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொகை என்பது 3 காலாண்டுகளிலேயே இத்தனை அதிகமாக உள்ளது. வாராக்கடன் என்பது கணிசமாக குறைந்திருப்பதாகவும் நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது 2017-ல் வாராக்கடன்களின் அளவு 9.6விழுக்காடாக இருந்த நிலையில், கடந்த செப்டம்பரில் 3.2விழுக்காடாக குறைந்திருக்கிறது. ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் அதிகப்படியான உபரித் தொகையான 874.16 பில்லியன் ரூபாய் மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. சந்தைகளில் மட்டும் 430 பில்லியன் ரூபாய் அளவுக்கு பொதுத்துறை நிறுவனங்கள் நிதியை திரட்டியுள்ளன. இது கடந்த நிதியாண்டில் 450 பில்லியன் ரூபாயாக இருந்தது. பட்ஜெட்டை மட்டுமே இந்திய வங்கிகள் நம்பி இருக்கவேண்டிய தேவை இருக்காது என்று நிதித்துறை செயலர் விவேக் ஜோஷி கூறியுள்ளார்.