முதலீட்டாளர்களுக்கு செபி சொல்லும் 5 அறிவிப்புகள்!!!
மதாபி புரி புச் என்பவர் செபியின் தலைவராக உள்ளார். பெரிய நிறுவனங்கள்,பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேற விரும்பினால் அதனை எளிமையாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.சில நிறுவனங்கள் மகாபாரதத்தில் வரும் அபிமன்யு போல திகழ்கிறார்கள் என்று மதாபி கூறியுள்ளார். அபிமன்யு நிறுவனங்களை செபிக்கு பிடிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். வெளியேறுவதற்கான எளிமையான வழிமுறைகளை செபி செய்துவருதாகவும் தெரிவித்துள்ளார். உடனடி செட்டில்மண்ட் இந்தியாவில் பங்குச்சந்தைகளில் உடனடி செட்டில்மண்ட் என்பது விரைவில் சாத்தியப்படும் என்றார் உலகளவில் விரைவான பங்குச்சந்தைகளாக இந்திய சந்தைகள் இருப்பதாக கூறிய மதாபி,அதனை இன்னும் வேகப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.தற்போது வரை வணிகம் செய்த 2 அல்லது 1 நாள் கழித்துத் தான் பணம் முதலீட்டாளர்கள் கைகளுக்கு கிடைக்கின்றன. அதனை எளிமைப்படுத்த முயற்சி நடப்பதாகவும்,அதற்கான தொழில்நுட்பப் பணிகள் நடப்பதாகவும் கூறினார். இன்சைடர் டிரேடிங்கை பகுப்பாய்வு செய்வதற்கான பணிகள் நடப்பதாக கூறியுள்ள மதாபி,தற்போதுள்ள விதிகளை கடுமையாக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறினார்.வெளிப்படைத் தன்மையை அதிகரிக்க இந்த விதிகள் கடுமையாக்கப் படவேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பரஸ்பர நிதியில் T+1 அமைப்பில் பங்குகளையும்,நிதியையும் ஒதுக்க பணிகள் நடக்கின்றன என்றார். தற்போது இந்த நடைமுறை T+2 நாட்களாக உள்ளது. குறிப்பிட்ட இந்த பங்குகளில் முதலீடு செய்யுங்கள் என்று கூறும் இன்புளூயன்சர்களை தணிக்கை செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் மதாபி கூறியுள்ளார். பங்குச்சந்தை தரகு நிறுவனங்கள் இன்புளுயன்சர்களுடன் தொடர்பு இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய விதிகள் வகுக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.