காத்து வாங்கும் விமானங்கள்..
இந்தியாவில் பண்டிகை கால விற்பனை உச்சமடைந்து வரும் வேளையில், விமான நிறுவனங்கள் மட்டும் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்க முடியாமல் தடுமாறுகின்றன.
சில நாட்களுக்கு முன்பு, இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, அதன் ஷோ ரூம்கள் பின்னிரவு வரை திறந்திருக்கும் என அறிவித்தது.
பண்டிகை கால விற்பனை உயர்வு மற்றும் ஜிஎஸ்டி குறைப்புகளின் தாக்கம் மிகவும் வலுவாக இருப்பதால் கார்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது.
“கார்கள் வாங்க விரும்புபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. சில வகையாக கார்ககளுக்கான ஸ்டாக் தீர்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது” என மாருதி சுசுகியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவின் மூத்த நிர்வாக அதிகாரி பார்த்தோ பானர்ஜி கூறியுள்ளார். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு விற்பனை அளவு வெகுவாக அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.
ஏர் கண்டிஷனர்கள், வாஷிங் மெஷின்கள் மற்றும் பிற வீட்டு உபயோகப் பொருட்களின் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களும்,
இதே போன்ற விற்பனை உயர்வை எதிர்கொண்டுள்ளனர்.
ஆனால் விமான சேவை நிறுவனங்கள், இந்த விற்பனை அதிகரிப்பு கொண்டாட்டங்களில் பங்கெடுக்க முடியவில்லை.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் அதன் வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட தினசரி பயணிகளின் எண்ணிக்கை சுமார் 4,80,000 ஆக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இது 520,000ஆக இருந்தது ஒப்பிடத்தக்கது.
2025 ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 2.56 கோடியாக, 2024இன் இதே காலகட்டத்தின் எண்ணிக்கையான 2.61 கோடியை விட 2% சரிந்துள்ளதாக ET பிரைம் கூறியுள்ளது. அதே சமயத்தில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் பயணிகள் விமான சேவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் மாதத்திற்கான எண்களை விமான ஒழுங்குமுறை ஆணையமான DGCA இன்னும் வெளியிடவில்லை.
