22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
பொருளாதாரம்

விரைவில் வருகிறது ஆப்பிள் மின்சார வாகனம்..

சீனாவின் இரண்டு பெரிய மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களாக byd.co.மற்றும் Tesla inc ஆகிய நிறுவனங்கள் திகழ்கின்றன. இந்த போட்டியில் தற்போது செல்போன்களை தயாரித்து வரும் Huawei,Xiaomi நிறுவனங்களும் மின்சார வாகனங்கள் உற்பத்தியில் குதிக்க இருக்கின்றன. இந்த பரபரப்பு ஓய்வதற்குள் ஆப்பிள் நிறுவனமும் தனது மின்சார வாகனங்கள் உற்பத்திக்கான பணிகளை தூசிதட்டி எடுத்திருக்கிறது. Aito M7ரக எஸ்யுவி ரக மின்சார காரை ஹுவாவே நிறுவனம் உற்பத்தி செய்ய இருக்கிறது. முதல்கட்டமாக 80 ஆயிரம் கார்கள் இந்த வகையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து Avatr 12 luxury coupe. மற்றும் Luxeed S7 sedan ரக கார்களையும் ஹூவாவே உற்பத்தி செய்ய இருக்கிறது. டெஸ்லா நிறுவனத்துக்கு போட்டியாக BYDநிறுவன கார்களும் சீனாவில் வேகமாக விற்கப்பட்டு வருகின்றன
இதனிடையே Xiaomi நிறுவனம் தனது புதிய மென்பொருளை தயார் நிலையில் வைத்திருக்கிறது. புதிய கார் அடுத்தாண்டு முதல் பாதியில் சந்தைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் icarஎன்ற தானியங்கி காரை அடுத்த 5 ஆண்டுகளில் கொண்டுவர ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. கார் உற்பத்தியை எங்கு செய்வது,யாரிடம் இருந்து பொருட்களை பெறுவது போன்ற அம்சங்களை டிம்குக்கே கவனித்து வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
செல்போன் உற்பத்தியில் கொடிகட்டி பறக்கும் நிறுவனங்கள் அடுத்தகட்டமாக கார்கள் உற்பத்தியில் அதுவும் மின்சார கார்கள் உற்பத்தியில் குதித்து இருப்பது சந்தையில் பேசு பொருளாக மாறியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *