லேப்டாப் இறக்குமதிக்கு தடை
லேப்டாப்கள்,டேப்லட்டுகள், கணினிகள் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. முறையான லைசன்ஸ் இருந்தால் மட்டும் மத்திய அரசின் அனுமதியுடன் லேப்டாப்களை இறக்குமதி செய்யலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ultra small form factor உள்ள கணினிகள் மற்றும் சர்வர்கள் HSN8741 என்ற விதிப்படி இறக்குமதி செய்ய இயலாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை இந்த வகை கணினிகள் இறக்குமதிக்கு வரி ஏதும் இல்லாமல் இருந்தது. குறிப்பிட்ட இந்த வகை கணினிகள் இறக்குமதி செய்ய சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது ஒரே ஒரு லேப்டாப்,டேப்லட் ,பிசி, அல்லது ஏதேனும் பொருளை ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ள இயலும். இதுவே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் கணினிகளுக்கு இனி இறக்குமதி வரி விதிக்கப்பட இருக்கிறது. அரசு விதிகளுக்கு உட்பட்டு இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு 20 பொருட்கள் வரை இறக்குமதி செய்ய லைசன்ஸ் அளிக்கப்படும்.அதுவும் ஆய்வு,ஆராய்ச்சி, பழுது நீக்குதல் உள்ளிட்ட காரணிகளுக்கு மட்டுமே இந்த லைசன்ஸ் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டலை பயன்படுத்தும் ஒவ்வொருவரின் பாதுகாப்புக்காக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக ICEA அமைப்பின் தைலவர் பங்கஜ் தெரிவித்துள்ளார். முறையற்ற நிறுவனங்களுக்கு உரிமம் கிடைக்காது என்பதால் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மூலதன பொருட்களில் இந்த வகை கணினிகள் இறக்குமதிசெய்யும்பட்சத்தில் அதற்கு இந்த தடை பொருந்தாது என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.