ஐடிசியில் இருந்து விலகிச்செல்லும் BAT..
இந்திய புகையிலை நிறுவனமான ஐடிசியின் மிகமுக்கிய பங்குதாரராக பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனம் அமெரிக்காவின் பிரபல வங்கிகளான சிட்டி மற்றும் பேங்க் ஆஃப் அமெரிக்காவுடன் இணைந்து 21,000கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை விற்க பணிகளை செய்து வருகிறது. அதாவது ஐடிசியில் உள்ள தனது பங்கில் 4 விழுக்காடு வரை BATநிறுவனம் பணத்தை வெளியே எடுக்க திட்டமிட்டு உள்ளது. இதற்காக ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுக்காக பாட் நிறுவனம் காத்திருக்கிறது. கடந்தாண்டு டிசம்பர் 23 வரையிலான காலகட்டத்தில் பாட் நிறுவனம் ஐடிசியில் 29.03விழுக்காடு பங்குகளை வைத்திருக்கிறது. அதாவது 1.47லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை அந்நிறுவனம் பாட் நிறுவனம் கொண்டுள்ளது. ஐடிசி நிறுவனத்தின் சந்தை மூலதனம் என்பது 5.07லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது.
பாட் நிறுவனம் ஏற்கனவே கெண்ட் உள்ளிட்ட சிகரெட்களை விற்று வருகிறது. முதலில் ஐடிசிக்கு போட்டியாக இருந்த நிறுவனம் பின்னாளில் ஐடிசியுடன் ராசியானது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ஐடிசி நிறுவனத்தின் பங்குகள் 86 விழுக்காடு உயர்ந்திருக்கின்றன. வெறும் 4 விழுக்காடு அளவுக்கு மட்டுமே பங்குகளை விற்கும் பாட் நிறுவனம், 25 விழுக்காடு முதலீடுகளை பிடிப்பதை தவிர்க்கவில்லை. புகையிலை துறையில் வெளிநாட்டு முதலீடுகளை மத்திய அரசு தடை விதித்ததும், பங்குகள் வாங்க ,விற்க தங்கள் அனுமதி வேண்டும் என்று ரிசர்வ்வங்கி விதித்த கட்டுப்பாடுகளால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் காண்டானது தான் மிச்சம். டேவிட் ராபர்ட் சிம்ப்சன் என்பவர் ஐடிசி நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார். சிம்ப்சன் அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார், 5 ஐடிசியில் உள்ள 29 விழுக்காடு பங்குகளில் அதிகவனம் ஈர்த்திருக்கும் அதிகாரிகள் 4.03% பங்குகளை மட்டும்தான் விற்கப்போதாக கூறப்படுகிறது. இந்திய சந்தையில் இருந்து எடுக்கப்படும் அளவு பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் முதலீடுகள் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.