இந்தியாவுடனான டீல் கதம் கதம்.. !!!
உலகளவில் டெஸ்லாவுக்கு அடுத்தபடியாக அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிறுவனம் இருக்கிறது என்றால் அது நிச்சயம் அது சீனாவின் BYDஆகத்தான் இருக்கும்.தனித்துவமான வடிவமைப்பு,டெஸ்லா நிறுவனம் போலவே மின்சார கார்கள், மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் விலை குறைவு உள்ளிட்ட பாசிடிவ் இந்த வகை கார்களுக்கு உண்டு. எனினும் இந்தியாவில் BYD நிறுவனம் தனது ஆதிக்கத்தை செலுத்த முடியாமல் உள்ளது. அண்மையில் அந்த நிறுவனம் இந்தியாவில் 1பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு முதலீடு செய்ய ஆர்வம் காட்டியது. எனினும் மத்திய அரசு இந்த முதலீட்டை வேண்டாம் என்று உதறியது. பாதுகாப்பு காரணங்களை காட்டி இந்த திட்டத்தை மத்திய அரசின் அமைச்சர்கள் தள்ளிப்போட்டனர்.
இந்தியாவில் கடந்த 16 ஆண்டுகளாக சந்தையில் இருக்கும் தங்கள் நிறுவனம் பயணிகள் கார் மற்றும் மின்சார பேருந்துகளை தயாரித்து வருவதாக கூறியுள்ள BYD நிறுவனம், முதலீடு செய்யத் தயாராக இருந்தபோதிலும் மத்திய அரசு ஏற்கவில்லை என்று தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் மின்சார கார்கள் உற்பத்திக்கு அதிக கவனம் செலுத்த இருந்ததாக BYDகூறியுள்ளது. 2020ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா வீரர்களுக்கு இடையே நேரிட்ட மோதலின்போது,20க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்,.அதன்பிறகு சீன செயலிகளுக்கு இந்தியா தடைவிதித்தது.
2007ஆம் ஆண்டு ஐதராபாத்தில் நிறுவனத்தை தொடங்கிய BYDநிறுவனம் மொபைல்களுக்கு பேட்டரி தயாரித்து அளித்து வருகிறது. 2013ஆம் ஆண்டில் இருந்து மெகா இன்ஜினியரிங் என்ற பெயரில் மின்சார பேருந்துகளையும் BYD தயாரித்து வருகிறது. ஏற்கனவே 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை அந்நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்துள்ளது.
2022 முதல் இதுவரை 1950 கார்களை அந்நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது.
இந்தியாவில் மின்சார கார்களின் விற்பனை சந்தை என்பது சிறியதாக இருந்தாலும் அதில் டாடாமோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. இதுவரை மின்சார கார்களின் எண்ணிக்கை வெறும் 2%ஆக மட்டுமே இருக்கிறது. இதனை 2030ஆம் ஆண்டுக்குள் 30%ஆக உயர்த்தவே மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.