ஜப்பானை மிஞ்சும் ஜெர்மனி…
உலகின் 3ஆவது பெரிய பொருளாதார நாடு என்ற இடத்தை ஜப்பானிடம் இருந்து ஜெர்மனி தட்டிப்பறிப்பதாக சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. ஜெர்மனியின் உள்நாட்டு உற்பத்தி 4.43 டிரில்லியன் டாலராக இந்தாண்டு உள்ளதாகவும்.ஜப்பானின் உள்நாட்டு உற்பத்தி 4.23டிரில்லியன் டாலராகவும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஜப்பானிய பணமான என்னின் பணமதிப்பு எண்பது ஒரு யூரோவுக்கு 160 என் என்ற அளவை எட்டியுள்ளது.கடந்த 33 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்க டாலர்களுக்கு நிகரான ஜப்பானிய என் மதிப்பு குறைந்திருக்கிறது. ஜப்பானின் பண மதிப்பு என்பது தொடர்ந்து சரிந்தபடியே கிடக்கிறது. நிதி கொள்கைகளில் ஏற்பட்ட மாறுதல் காரணமாகவே இந்த சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் மற்றும் இங்கிலாந்து மத்திய வங்கி ஆகியன வரும் கூட்டங்களில் தங்கள் மத்திய வங்கி வட்டி விகிதங்களை மாற்றப்போவதில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளன.
அடுத்த வாரம் ஜப்பானின் வங்கியான BOJ கூட இருக்கிறது. இந்த நிலையில் நீண்ட ஆண்டுகளுக்கான திட்டங்களை ஜெர்மனி வகுத்து வருவதாகவும் ஐஎம்எப் கூறுகிறது. ஜப்பானின் பொருளாதாரம் கடந்த 30ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியை கண்டிருப்பது உண்மைதான் என்று நிபுணர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஆற்றல்துறை மானிய நீட்டிப்பு உள்ளிட்ட திட்டங்களை ஜப்பான் செய்ய இருப்பதாகவும்,அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா அறிவித்திருக்கிறார். கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அடிப்படை பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். சில வரிகளை குறைத்து மக்கள் மத்தியில் வருவாயை கூட்டவும் ஜப்பான் திட்டமிட்டு வருவதாக பிரதமர் ஃபுமியோ கிஷிடா குறிப்பிட்டுள்ளார். ஜப்பானைவிட ஜெர்மானியர்களின் தனிநபர் ஜிடிபி சராசரி வருமானம் என்பது, சராசரியாக 52,824 அமெரிக்க டாலர்களாக உள்ளது. ஜப்பானியர்களின் ஓராண்டு சராசரி வருமானம் 33,950 அமெரிக்க டாலர்களாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.