கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்துக்கு சிக்கல்
அமெரிக்க விமான என்ஜின் நிறுவனம் செய்த சதியால் விமானங்களை இயக்க முடியாத சூழலில் கோஃபர்ஸ்ட் நிறுவனம் தற்போது செயல்படாமல் கிடக்கிறது.இது தொடர்பான சிக்கலை தீர்க்க தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் கோஃபர்ஸ்ட் நிறுவனம் திவால் நோட்டீஸ் அளித்துள்ளது. இந்த பிரச்னை மெல்ல மெல்ல சீரடைந்து வருகிறது. இந்த சூழலில் புதிதாக அந்நிறுவனத்துக்கு வேறொரு நிறுவனத்தால் சிக்கல் எழுந்துள்ளது. fly creative என்ற தனியார் நிறுவனம்,இந்த தீர்ப்பாயத்தில் முறையீடு செய்திருக்கிறது. அதில் 5 கோடியே 70 லட்சம் ரூபாய் பணம் கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் சார்பில் தரவேண்டியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. குழு புக்கிங் செய்யப்பட்ட இந்த பணம் அரசாங்கம் தங்கள் நிறுவனத்துக்கு கடனாக அளித்த பணம் என்றும் ஃபிளை கிரியேட்டிவ் தெரிவித்துள்ளது.கடந்த மே 2 ஆம் தேதியில் இருந்து கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் இயங்காமல் கிடக்கிறது.
இதனால் தங்கள் தரப்பில் செய்யப்பட்ட புக்கிங் பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று தீர்ப்பாயத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையை தீர்ப்பாயம் வரும் 1 ஆம் தேதி மேற்கொள்ள இருக்கிறது.
கோஃபர்ஸ்ட் நிறுவனத்துக்கு உள்ள சிக்கல்களை தீர்க்க மோரடோரியம் என்ற அவகாச காலம் கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்துக்கு தீர்ப்பாயம் அளித்திருக்கிறது. அவகாசம் கிடைத்திருப்பதால் விமான லீஸ்க்கான கட்டணம் செலுத்துவதிலும் குறிப்பிட்ட நிறுவனத்துக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் மீட்புப்பணிகள் குறித்து சிவில் போக்குவரத்து இயக்குநரகம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறது. இது தொடர்பான விசாரணையும் தீவிரமடைந்துள்ளது. ஒரே நேரத்தில் அடுத்தடுத்து கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இதனால் அந்நிறுவனம் மீண்டும் இயங்குமா என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.