உயர்ந்த தங்கம் விலை..!!!
இந்திய பங்குச்சந்தைகள் தீபாவளிக்கு பிந்தைய Diwali Balipratipada என்ற பண்டிகை காரணமாக நவம்பர் 14 ஆம் தேதி இயங்கவில்லை. அதே நேரம் இந்தியாவில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த சிலநாட்களாக தங்கம் விலை சற்று குறைந்து வந்தபோதிலும், சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு தகுந்தபடி தங்கம் விலையும் ஊசலாட்டத்துடன் காணப்படுகிறது. 44 முதல் 45,000ரூபாய் என்ற அளவில் தங்கம் ஏறி,இறங்கி ஆட்டம் காட்டி வருகிறது.
சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 200ரூபாய் அதிகரித்து 44,920 ரூபாயாக விற்கப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் முன்தின விலையை விட 25 ரூபாய் அதிகரித்திருக்கிறது.ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து 15 ரூபாயாக விற்பனை ஆகிறது. இது மட்டுமின்றி வெள்ளியின் விலையும் கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து 76 ரூபாயாக விற்கப்படுகிறது.
கட்டிவெள்ளி விலை[ முன்தின விலையை விட கிலோவுக்கு 600ரூபாய் அதிகரித்து 76ஆயிரம் ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இங்கே குறிப்பிட்டுள்ள தங்கம்,வெள்ளி விலைகள் ஜிஎஸ்டி மற்றும் செய்கூலி,சேதாரம் சேர்க்காதது. இந்த விலைகளுடன் 3விழுக்காடு நிலையான ஜிஎஸ்டி கட்டாயம் செலுத்தவேண்டும், இதேபோல் செய்கூலி,சேதாரம் என்பது கடைக்கு கடை மாறுபடும் என்பதை நினைவில் கொண்டு ஆபரணங்களை வாங்குவது சிறந்த அனுகு முறையாகும். குறைந்தபட்சம் 400 கிராம் தங்கமாவது ஒரு குடும்பத்தில் இருந்தால் அது அவசர தேவைக்கு நிச்சயம் பயன்படும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது