உச்சம் தொட்ட இந்திய சந்தைகள்..

இந்திய பங்குச்சந்தைகள் ஜூலை 13ஆம் தேதியான வியாழக்கிழமை ஏற்றம் கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வரலாற்றிலேயே முதல்முறையாக 66 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. வணிகம் முடியும்போது,சென்செக்ஸ் 165 புள்ளிகள் உயர்ந்து 65 ஆயிரத்து 558 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 29 புள்ளிகள் உயர்ந்து 19 ஆயிரத்து 413 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது.
விப்ரோ நிறுவனத்தன் முதல் காலாண்டு நிகர லாபமாக 12 விழுக்காடு உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு ஆண்டு வருவாய் லாபம் மட்டும் 2 ஆயிர்த்து 870 கோடி ரூபாய் லாபத்தை பதிவு செய்துள்ளது. இது ஏற்கனவே கணிக்கப்பட்ட அளவை விட குறைவாகும். முதல் பாதியில் அட்டகாசமாக உயர்ந்த பங்குச்சந்தைகள் பிற்பகலில் பெரிதாக வீழ்ந்தன. எனினும் முதலீட்டாளர்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. தகவல் தொழுல்நுட்பத்துறை பங்குகள் மீதான எதிர்பார்ப்புகள் அதிகம் இருப்பதால் வரும் நாட்களில் பங்குச்சந்தைகள் பெரிய உச்சத்தை தொட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் சூழலில் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 296 ரூபாய் உயர்ந்திருக்கிறது. ஒரு கிராம் தங்கம் 37 ரூபாய் அதிகரித்து 5 ஆயிரத்து 537 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் 44 ஆயிரத்து 296 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து 79 ரூபாய் 50 காசுகளாக விற்பனையாகிறது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் அதிகரித்து 79 ஆயிரத்து 500 ரூபாயாக மாறியுள்ளது. இந்த விலைகளுடன் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மற்றும் செய்கூலி, சேதாரம் சேர்த்தால்தான் உண்மையான தங்கம் விலை கிடைக்கும். ஆனால் செய்கூலி, சேதாரம் கடைக்கு கடை மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.