இந்தியாவில் காலூன்றுகிறதா சீன மின்சார கார் நிறுவனம்..
உலகின் மிகப்பெரிய மின்சார கார் உற்பத்தி நிறுவனமான சீனாவின் BYD நிறுவனம்இந்தியாவில் தனது ஆதிக்கத்தை செலுத்த நினைக்கிறது. குறிப்பாக ஆடம்பர அதாவது சொகுசு மின்சார கார்களில் இந்த ஆதிக்கம் தேவைப்படுகிறதாம். அந்நிறுவனத்தில் உள்ள தொழில்நுட்பத்தையும், 30 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள மின்சார கார் என்ற பிரிவிலும் இந்த புதிய அம்சங்களை மக்கள் பெரிதும் விரும்புவதாக அந்நிறுவனத்தின் மூத்த துணைத்தலைவர் சஞ்சய் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சீன உற்பத்தி பொருட்களை இந்திய அரசு குறைக்க விரும்பி வரும் இந்த சூழலில் பிஒய்டி நிறுவனத்தின் இந்த முடிவு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 41 லட்சம் ரூபாயில் இருந்து கிடைக்கும் மின்சார கார்களின் இந்த சொகுசு வாகனங்கள் சந்தையில் கவனம் ஈர்த்து வருகிறது. தொலைநோக்குப் பார்வையுடன் இதை தெரிவிப்பதாக கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தியா என்பது மிகப்பெரிய சந்தை என்றும் பயணிகள் வாகனங்களில் ஏற்கனவே இந்தியா நான்காவது இடத்தில் இருக்கும் நிலையில் வரும் 2030ஆம் ஆண்டு இந்தியா 3 ஆம் இடம் பிடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவிற்குள் 1 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு முதலீடு செய்யும் பிஒய்டி நிறுவனத்தின் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தியாவில் பயன்படுத்தப்படும் 3-ல் ஒரு மின்சார கார் 2030-ல் அது பிஒய்டி நிறுவன காராக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்தியாவின் 90 விழுக்காடு மின்சார கார் சந்தையை பிடிக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. இந்தியாவில் தற்போது வரை பிஒய்டி நிறுவனத்திற்கு என 21 நகரங்களில் 24 ஷோரூம்கள் உள்ளன. BYD Atto, E-6 என்ற இரண்டு ரக கார்களை அந்நிறுவனம் இந்தியாவில் விற்று வருவது குறிப்பிடத்தக்கது.