ஈஸியா வேலையை முடிக்கும் மஸ்க்…
டிவிட்டர் நிறுவனத்தை வாங்கி அதனை எக்ஸ் என்று பெயர் மாற்றியதுடன் லாபகரமாக மாற்ற பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த நிறுவனத்துக்கு பெரிய சவாலாக இருப்பது பாட்ஸ் எனப்படம் போலி கணக்குகள்தான். இதனை நீக்க அண்மையில் புதிய சந்தா வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று மஸ்க் அண்மையில் அறிவித்து இருந்தார். அதன்படி ஒரு வருடத்துக்கு 1 டாலர் அடிப்படை கட்டணம் வசூலிக்க இருப்பதாக எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார். இதற்கான சோதனை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. not a botஎன்று இதற்கு பெயர் இடப்பட்டுள்ளது. இணைய வழியில் இதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் நாட்டுக்கு நாடு வேறுபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து மற்றும் பிலிப்பைன்சில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 3 வகையான சேவைகளை கட்டணம் பெற்றுக் கொண்டு செயல்படுத்த இருப்பதாக டிவிட்டரின் சிஇஓ லிண்டா அண்மையில் அறிவித்திருந்தார். இதன்படியே தற்போது பாட்களை காலி செய்யும் நோக்கில் அடிப்படை கட்டணம் வசூலிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த திட்டம் இந்தியாவிலும் செயல்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.