பென்ஷனில் புதிய விதிகள்..
மத்திய அரசு நிறுவனங்களில் வேலை செய்யும் பெண் ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தில் பல்வேறு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை என்ன என்பதை இப்போது பார்க்கலாம். முக்கியமானதாக மத்திய அரசின் பெண் பணியாளர்கள் இனி குடும்ப ஓய்வூதியத்தில் தனது கணவருக்கு பதிலாக, குழந்தைகளின் பெயரை பரிந்துரைக்கலாம். விவாகரத்து நடக்கும் பட்சித்தில் மட்டுமே இதனை செய்ய இயலும். இந்த புதிய திட்டத்தில் தனது காலத்துக்கு பிறகு கணவருக்கு பணம் செல்லாமல் தனது குழந்தைகளுக்கு ஓய்வூதியம் கிடைக்க வகைசெய்யப்பட்டுள்ளது. ஒரு வேளை பணி காலத்திலேயே குறிப்பிட்ட பெண் மத்திய அரசு பணியாளர் இறந்துபோனால், குழந்தைகள் பெயரை சேர்க்கவில்லை என்றால் அந்த ஓய்வூதியத் தொகையை கணவர் பெற்றுக்கொள்ள தகுதியானவர். அந்த ஓய்வூதியத் தொகையும் 18 வயது பூர்த்தி அடைந்த பிறகே மத்திய அரசு பணியாளரின் குழந்தைகள் எடுத்துக்கொள்ள இயலும், அதுவரை பணியாளரின் கணவர் அந்த தொகைக்கு தகுதியானவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது., பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இந்த புரட்சிகரமான மாற்றங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை மத்திய அரசின் துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியர் உயிரிழந்துவிட்டால், அவரின் கணவர் மீண்டும் ஒரு திருமணம் செய்துகொள்ளும் வரை விதவை கணவர் ஓய்வூதியம் பெற தகுதியானவர் என்றும் வரைமுறை படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு பெண் பணியாளரும், அவரின் கணவரும் இறந்துவிட்டால் , அவரின் குழந்தைகள் ஓய்வூதியம் பெற தகுதியானவர்கள் என்றும் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.