ஆன்லைன் கேமிங்- 28% வரி விதிப்பு..
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத்துறை வாரியமான CBIC புதிய சுற்றறிக்கையை வெளியிட்டிருக்கிறது.அதன்படி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு வரும் 1ஆம் தேதி முதல் 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட இருக்கிறது.அந்த வாரியத்தின் தலைவராக இருக்கும் சஞ்சய் குமார் அகர்வால் இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.அதன்படி அனைத்து மாநிலங்களும் இது தொடர்பான அறிவிப்பை ஆணையாக வெளியிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.மேலும் இதுகுறித்து பகுப்பாய்வு அடுத்த 6 மாதங்களில் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்தஜூலை மாதம் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் குதிரை பந்தயம்,ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் கேசினோக்களுக்கு 28%ஜிஎஸ்டி வரி விதிக்க இசைவு தெரிவித்தது. இது தொடர்பாக ஆன்லைன் விளையாட்டு சேவைகள் அளிக்கும் நிறுவனங்களுக்கு சட்ட ரீதியிலான ஷோ காஸ் நோட்டீசும் அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளில் இதுவரை வாய்ப்புகள் சார்ந்த விளையாட்டுகள் மற்றும் திறமை சார்ந்த விளையாட்டுகள் என்று வகை படுத்தப்பட்டிருந்தன. ஆனால் தற்போது இவை அணைத்தும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு ஆன்லைன் விளையாட்டு சேவைகள் வழங்கும் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. எனினும் அதனை கருத்தில் கொள்ளாமல் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. இனி ஆன்லைனில் சூதாடினால் அரசாங்கத்துக்கு 28விழுக்காடு என்ற உச்சபட்ச தொகை செலுத்திதான் விளையாட முடியும்,இதேபோல் கிடைக்கும் பரிசுத்தொகைக்கும் 28விழுக்காடு ஜிஎஸ்டி பொருந்த இருக்கிறது. உதாரணமாக நீங்கள் 100 ரூபாய் பரிசு வெல்கிறீர்கள் என்றால் அரசாங்கத்துக்கு 28% ஜிஎஸ்டி செலுத்தி முடித்த பிறகுதான் மீதத் தொகை உங்களுக்கு அளிக்கப்படும்.