22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
பொருளாதாரம்

2,500 பேரை பணிநீக்கம் செய்யும் பிரபல பணக்கார நிறுவனம்…

பணம் இருக்கும் மனிதனிடம் மனம் இருப்பதில்லை, மனம் இருக்கும் மனிதனிடம் பனம் இருப்பதில்லை என்ற சந்திரபாபு பாடல் வரிகளை நிஜமாக்கும் வகையில் ஒரு தரமான சம்பவத்தை பெரிய பணக்கார நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் செய்ய திட்டமிட்டுள்ளது. சிக்கன நடவடிக்கையாக 2,500பேரை வேலையில் இருந்து நிறுத்த ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. இன்ஜின் தயாரிப்பு பிரிவில் இந்த ஆட்குறைப்பு நடைபெற இருக்கிறதாம். குறிப்பாக இதில் அதிகம் பாதிக்கப்படப்போவது பிரிட்டனைச் சேர்ந்த பணியாளர்கள் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. Tufan Erginbilgic என்பவர் தலைமை செயல் அதிகாரியாக பதவியேற்றபிறகு இந்த சிக்கன நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.கடந்த மே மாதத்தில் உலகின் பல நிறுவனங்களும் தனது பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கிய நிலையில் நாங்கள் ஆட்குறைப்பை பற்றி யோசிக்கவில்லை என்று ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது 2,500பேரை நீக்க முடிவெடுத்திருப்பது அதன் பணியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுக்கு பல கோடி ரூபாய் லாபம் பார்க்கும் சொகுசு கார் நிறுவனம் திடீரென பணியாளர்களை நீக்க இருக்கும் தகவல் உலகளவில் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தனை பணத்தையும் வைத்து என்ன செய்யப்போகிறார்களோ என சில சமூக ஆர்வலர்கள் கேட்காமல் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *