மீண்டும் மந்தநிலை அபாயம்..?
பொருளாதார மந்தநிலை மீண்டும் அடுத்தாண்டு எட்டிப் பார்க்கும் அபாயம் இருப்பதாக மத்திய நிதியமைச்சகம் எச்சரித்திருக்கிறது. மாதந்தோறும் நடத்தப்படும் ஆய்வுக்கூட்டத்தில் இது பற்றி நிதியமைச்சகம் பேசியிருக்கிறது. இந்தியாவில் ஓரளவு நிலைமை சீராக இருப்பதைப்போல தோன்றினாலும்,உலகளவில் பிரச்சனைகள் கொஞ்சம் சீரியஸ்தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இந்தியாவில் அக்டோபர் மாதம் தங்கம் இறக்குமதி விகிதம் கடந்தாண்டைவிட 60%அதிகரித்து இருக்கிறது. இது கடந்த 31 மாதங்களில் இல்லாத அதிகபட்சமாகும். கடந்தாண்டு அக்டோபரை ஒப்பிடும்போது மீண்டும் இந்தாண்டு அக்டோபரில் தங்கம் இறக்குமதி என்பது இரட்டிப்புக்கும் அதிகமாகியுள்ளது. இந்தாண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில பல்வேறு பொருட்களின் இறக்குமதியும் சரிந்துள்ளது. சர்வதேச கச்சாஎண்ணெய் விலை சரிந்து வருவது,பணவீக்கத்தை கட்டுப்படுத்த கைகொடுக்கும் என்று கூறப்படுகிறது. கிராமபுற பகுதிகளில் இரண்டாவது காலாண்டில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. தனியார் செலவின கணக்கான pfce இந்தியாவில் வலுவடைந் திருப்பதாகவும் ,பண்டிகைக்காலத்தால் இது சாத்தியமானதாகவும் நிதியமைச்சகம் கூறியுள்ளது. சேவைத்துறையில் செலவுகள் அதிகம் இருந்தாலும், அதில்தான் அதிக வருவாய் கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு சுற்றுலாவும் மிகமுக்கிய பங்காற்றியதாக நிதியமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.