அரசுக்கு டாடா மோட்டார்ஸ் கோரிக்கை..
இந்தியாவின் முன்னணி மின்சார கார் உற்பத்தி நிறுவனமாக திகழும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அரசுக்கு ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறது. அதில் ஹைப்ரிட் டாக்ஸ் எனப்படும் கலவையான வரிகள் தேவை என்று கூறியுள்ளது.
அதில் தூய்மையான ஆற்றலில், சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தாமல் இயங்கும் மின்சார கார்களுக்கு ஒரு வரியும், பெட்ரோல் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் ஹைப்ரிட் கார்களுக்கு ஒரு வரியும் விதிப்பதுதான் சரியாக இருக்கும் என்றும், ஏனெனில் மின்சார கார்களில் எந்த வித சிக்கலும் இல்லை என்றும், ஆனால் ஹைப்ரிட் கார்கள் சுற்றுச்சூழலை அதிகம் மாசுபடுத்துவதாகவும் டாடா மோட்டார்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு வெறும் 5 விழுக்காடு மட்டுமே வரி விதிக்கப்பட்டு வருகிறது. அதே நேரம் ஹைப்ரிட் கார்களுக்கு 43 விழுக்காடு வரி விதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் கார்களுக்கு இந்த வரி 48%ஆக இருக்கிறது.
அதே நேரம் ஜப்பானிய கார் நிறுவனமான டொயோடா இந்த ஹைப்ரிட் வரியை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறது.
சுற்றுச்சூழலை பாதிக்கும் ஹைப்ரிட் கார்களுக்கு தற்போதுள்ள வரியை குறைவுதான் என்றும் டாடா நிறுவன அதிகாரிகள் அரசுஅதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே வெளிநாட்டு மின்சார காரான டெஸ்லா இந்திய சந்தைக்குள் வந்தால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில் டாடா மோட்டார்ஸ் இருக்கிறது.
டாடாவைப்போலவே, மகிந்திரா, ஹியூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள் டெல்லியில் தற்போதுள்ள திட்டமே தொடரவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.