NVIDIA நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்த பிரபல நிறுவனங்கள்..

ஐடி சேவைகளை வழங்கி வரும் பிரபல இந்திய நிறுவனங்களான விப்ரோ, டெக் மஹிந்திரா, எல்அன்ட் டி ஆகிய நிறுவனங்கள் என்விடியா நிறுவனத்துடன் கூட்டு வைத்துக்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளன. என்விடியாவின் தொழில்நுட்ப மாநாடு கலிஃபோர்னியாவில் நடந்தது. இந்த கருத்தரங்கில் டெக் மகிந்திரா நிறுவனம் என்விடியாஉடன் இணைந்து புதிய பார்மா கோவிஜிலன்ஸ் என்ற மென்பொருளை அறிமுகப்படுத்தியது. இது மருந்து கட்டுப்பாட்டுக்கு உதவிகரமாக இருக்கும் என்றும், செயற்கை நுண்ணறிவு, ஆட்டோமேஷன் ஆகிய துறைகளுக்கு இது பயன்படும் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் காலதாமதம் குறைக்கப்படும். இதனால் செலவும் குறைந்து, தரவுகளும் 30 விழுக்காடு கச்சிதமாக இருக்கிறது. அதேபோல் விப்ரோ நிறுவனமும் கட்டமைப்பு, தரவு, ஆட்களின் எண்ணிக்கை, வணிக பணி நேரம் ஆகியவற்றை இணைக்கும் புதிய செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. இந்த செயல்பாடுகள் வெளிப்படையாகவும், தரவுகள் பாதுகாப்பானதாகவும் இருக்கின்றன. இதேபோல் எல்அன்ட் டி நிறுவனத்தில் டிராக் ஈஐ என்ற புதிய வசதி அறிமுகமாகியுள்ளது. இது ரயில்வே தண்டவாளங்களை கண்காணிக்க உதவுகிறது. புதிய வசதி ரயில் தண்டவாளங்களில் மணிக்கு 60 மைல் தூரத்துக்கு அதிவேகமாக ஆய்வு மேற்கொள்கிறது. அதிநவீன கேமராக்கள், லேசர் புரொபைலிங் ஆகியவை மூலம் தண்டவாள விரிசல், வேறு ஏதனும் மாறுபாடுகள் இருந்தால் அதனை கண்காணிக்க உதவுகிறது.