அமெரிக்காவுக்கு வந்த அவல நிலை..
ஃபிட்ச் என்ற நிறுவனம் உலகின் பல நாடுகளின் நிதி நிலையை கண்காணித்து தரவரிசைபடுத்துவதில் பிரபல நிறுவனமாகும். இந்த நிறுவனம் அண்மையில் அமெரிக்காவுக்கு வழங்கி வந்த AAA தர சான்றை AA+தரமாக குறைத்து மதிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவில் நிலவும் நிதி பற்றாக்குறையே தரவரிசை குறைய முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. வரிகளை குறைக்கும் நடவடிக்கையில் தோல்வி,அடுத்தடுத்த பொருளாதார அதிர்ச்சி ஆகியவை நிதி பற்றாக்குறைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த தரக்குறைப்பு அடுத்த 3 ஆண்டுகளுக்கு இருக்கும் என்று கூறப்படுகிறது,அமெரிக்காவின் கடன் அதிகரிப்பும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்த தரக்குறைப்புக்கு விமர்சனம் தெரிவித்துள்ள அந்நாட்டுநிதியமைச்சர் ஜானட் எல்லன், ஃபிட்ச் நிறுவனத்தின் தரக்குறியீட்டால் அமெரிக்க முதலீட்டாளர்கள்,மக்களையும் எந்த விதத்திலும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். கடந்த மே மாதமே ஃபிட்ச் நிறுவனத்தின் எச்சரிக்கை வெளியாகியிருந்தது.பெரிய சிக்கல் தவிர்க்கப்பட்டது என்று கூறியுள்ள ஜானட், உள்நாட்டு உற்பத்திக்கும் கடனுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என்றார். எனினும் அமெரிக்க பொருளாதாரம் என்பது முன்னர் கணிக்கப்பட்டதைவிட வலுவான நிலையில் இருப்பதாகவும் கருவூல செயலாளர் லாரி சம்மர்ஸ் தெரிவித்துள்ளார். ஃபிட்ச் நிறுவனம் அமெரிக்காவின் தரக்குறியீட்டை குறைத்தாலும்,மூடீஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீஸ் நிறுவனம் அமெரிக்காவை AAA என்ற அளவில்தான் மதிப்பிட்டு வருகிறது.