இது டாடா ஐபிஓ அப்டேட்…
டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் 3042 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆரம்ப பங்கு வெளியீட்டை செய்திருக்கிறது. இது கடந்த 20 ஆண்டுகளில் டாடா குழுமம் செய்யும் முதல் ஐபிஓ. மொத்தம் 20.88 கோடி ஈக்விட்டி பங்குகள் முதல் நாளில் விற்கப்பட்டுள்ளன. மொத்த பங்கு அளவே 4.5 கோடி தான் ஆனால் விற்கப்பட்டதோ 4.64 மடங்கு அதிகமாக இருக்கிறது. ரீட்டெயில் முதலீட்டாளர்கள் 3.83 மடங்கு அதிகம் முதலீடு செய்திருக்கின்றனர். அதிக சொத்து மதிப்பு உள்ளவர்கள் இந்த ஆரம்ப பங்கு வெளியீட்டை 7.57 மடங்கு அதிகம் வாங்கியிருக்கின்றனர். இதேபோல் தகுதியான நிறுவனங்களின் பங்கு 3.79 மடங்கு அதிகமாகும். டாடா நிறுவன பணியாளர்கள் வாங்கிய பங்கின் மதிப்பு மட்டும் 0.77மடங்கு அதிகமாகும், டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் 6.05 மடங்கு அதிகம் வாங்கியிருக்கின்றனர். புனேவைச் சேர்ந்த பொறியியல் சேவை நிறுவனம் 20.28லட்சம் பங்குகளை தனது பணியாளர்களுக்கு அளித்திருக்கிறது. 60.85 லட்சம் பங்குகள் டாடா மோட்டார்ஸ்க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 35%பங்குகள் ரீட்டெயில் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும். டாடா ஐபிஓவில் ஒரு பங்கின் விலை நிலையாக 475 முதல் 500ரூபாயாக விற்கப்படுகிறது. இந்த நிறுவனம் நவம்பர் 21 ஆம் தேதி 791 கோடி ரூபாயை நிதியாகவும் திரட்டியது. Copthall Mauritius Investment, Goldman Sachs, BNP Paribas Funds, Government Pension Fund Global, HSBC Global, Oaktree Emerging Markets, SBI Mutual Fund, ICICI Prudential Mutual Fund, SBI Life Insurance Company, Kotak Mutual Fund, DSP Mutual Fund, HDFC Life Insurance , Bajaj Allianz Life Insurance Company உள்ளிட்ட நிறுவனங்கள் டாடா ஐபிஓவில் முதலீடு செய்திருக்கின்றனர். கிரே சந்தையில் இந்த பங்குகளின 70 விழுக்காடு பிரீமியம் தொகை செலுத்த வேண்டியிருக்கிறது. இந்த டாடாவின் ஆரம்ப பங்கு வெளியீடுகளில் முதலீடு செய்யவே அதிகம் பேர் ஆர்வம் காட்டி வருகின்றனர். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான டாடாடெக் நிறுவன பங்குகள் டாடா குழுமத்தின் நற்பெயர் மற்றும் நீண்ட எதிர்காலத்தின் நலனை கருத்தில் கொண்டு இந்த ஆரம்ப பங்கு வெளியீட்டுக்கு மக்கள் ஆதரவளித்து வருகின்றனர்.