பதவி விலகினார் உதய் கோட்டக் !!!
பிரபல வங்கியான கோடக் மகேந்திரா வங்கியின் சிஇஓ,மற்றும் MD பதவியில் இருந்து உதய் கோடக் விலகியுள்ளார். எனினும் அந்த வங்கியின் செயல்பாடுகளில் தலையிடாத இயக்குநராக அவர் தொடர இருக்கிறார். முதன்மை செயல் அதிகாரியாக உதய் கோடக்குக்கு வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை கால அவகாசம் இருக்கிறது. எனினும் அவர் உடனடியாக வெளியேறியுள்ளார்.
அவருக்கு அடுத்த சிஇஓவாக யாரை தேர்ந்தெடுப்பது என்ற பணிகள் தொடங்க ஏதுவாக அவர் பதவி விலகியுள்ளார். எளிதாக தலைமை மாறுவதை உறுதிபடுத்தும் வகையில் பதவிவிலகியுள்ளதாகவும் உதய் கோடக் கூறியுள்ளார். புதிய சிஇஓ வரும்வரை தீபக்குப்தா தலைமையை கவனிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பதவி விலகுவதாக உதய் அறிவித்துள்ளபோதிலும்,ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளிக்கப்பட இருக்கிறது. Egon zehnder என்ற நிறுவனத்திடம் புதிய தலைமை செயல் அதிகாரியை தேர்வு செய்யும் பணிகள் குறித்து கடந்த பிப்ரவரியில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த 1985ஆம் ஆண்டு முதல் கோடக் மகிந்திரா வங்கி இயங்கி வருகிறது.2003 முதல் வணிக வங்கியாகவும் அந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு 13.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. அட்டகாசமான ஒரு குழுவிடம் தலைமையை விட்டுச்செல்வதாக கூறியுள்ள உதய், ஜேபிமார்கன், கோல்ட்மேன் சாச்ஸ் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் கிளை தொடங்க திட்டமிட்டதாக கேள்விப்பட்டு அதுபோன்ற ஒரு நிறுவனத்தை இந்தியாவில் தாம் தொடங்கியிருப்பதாகவும்,300 சதுரடி இடத்தில் 38 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் தொடங்கிய நிறுவனத்தில் வெறும் 3 பேர் மட்டும் இருந்ததாக கூறினார்.தனது கனவில் ஒவ்வொரு தருணங்களிலும் வாழ்ந்து வந்ததாகவும் அவர் பழைய நினைவுகளை அசைபோட்டார். இந்த நிறுவனத்தில் கிட்டத்தட்ட 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 1985ஆம் ஆண்டு 10,000 ரூபாய் செலுத்தியிருந்தால் அந்த வங்கியில் தற்போதைய மதிப்பு 300 கோடி ரூபாய் என்று உதய் தெரிவித்தார்.