கடன் செயலிகளிடம் எச்சரிக்கை அவசியம்- ஜீரோதா ஓனர்…
ஜீரோதா என்ற தரகு செயலியின் நிறுவனரான நிதின் காமத் தனது டிஜிட்டல் கடன் செயலிகளில் சிலவற்றிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வாடிக்கையாளர்களின் விவரங்கள சேகரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து தரவுகளை டிஜிட்டல் நிதி நிறுவனங்கள் பெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ள நிதின் காமத், கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்புகள், மெசேஜ், போட்டோக்களை கேட்கவேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார். இத்தகைய செயலிகளிடம் இருந்து கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த மோசடி செயலியில் சிக்கி உயிரை கூட விட்டவர்கள் அதிகம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே நிதி சிக்கலில் இருக்கும் நபருக்கு ஆசையை தூண்டிவிட்டு அதன் மூலம் பணம் பறிக்க சில செயலிகள் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் எச்சரித்திருக்கிறார்.
தவறு செய்யும் கடன் செயலிகளை கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். டிஜிட்டலில் கடன் பெற்று அதனை வசூலிக்க மட்டும் ஆட்கள் நேரில் வருவார்கள் என்றும் குறிப்பிட்டார். சட்டவிரோத கடன் செயலிகள் குறித்து யூடியூப் ஒன்றிலும் அவர் பேசியுள்ளார்.