22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
நிதித்துறை

IndusInd வங்கி லேட்டஸ்ட் அப்டேட்..

2024-25ல் இன்டஸ்இண்ட் வங்கி இயக்குனர்களின் வருவாய் வெகுவாக அதிகரித்துள்ளது. அதன் டிரைவேட்டிவிஸ் போர்ட்போலியா (derivatives portfolio) தொகுப்பில் நடந்த குளறுபடிகளை சரி செய்வதற்காக, நிர்வாக குழு கூட்டங்கள் தொடர்ச்சியாக நடந்த நிலையில், அதில் கலந்து கொள்வதற்காக இயக்குநர்களுக்கு அளிக்கப்படும் அமர்வு கட்டணங்கள் மூலம் அவர்களின் வருவாய் அதிகரித்துள்ளது.


இன்டஸ்இண்ட் வங்கி தலைவர் சுனில் மேத்தா, 2024-25 நிதியாண்டில் அமர்வுக் கட்டணமாக ரூ.96.25 லட்சத்தை ஈட்டியுள்ளார். இது முந்தைய ஆண்டில் ரூ.47.95 லட்சமாக இருந்தது.

அதே சமயத்தில் மேத்தாவின் ஆண்டு ஊதியம் ரூ.30 லட்சமாக மாறுதல் இல்லாமல் இருந்தது என்று வங்கியின் ஆண்டு அறிக்கை கூறுகிறது. மேத்தாவின் மூன்று ஆண்டு பதவிக்காலம் ஜனவரி 30, 2026 அன்று முடிவடைய உள்ளது.


2025 மார்ச் முதல் ஆகஸ்ட் வரை, வங்கியின் நிர்வாக குழு 180 முதல் 200 கூட்டங்களை கூட்டியதாக அறியப்படுகிறது. கடந்த ஆண்டு இதே காலத்தை விட இது மிக அதிகமாகும்.

பல சந்தர்ப்பங்களில், நீட்டிக்கப்பட்ட அமர்வுகள் தொடர்ச்சிகளாகக் குறிக்கப்படாமல் புதிய கூட்டங்களாகக் குறிக்கப்பட்டன, இது அதிக ஊதியங்களுக்கு வழிவகுத்தது என்று தெரிய வந்துள்ளது.


KPMG-யின் மூத்த ஆலோசகரான நிர்வாகக் குழு உறுப்பினர் பிரதீப் உதாஸ், நிதியாண்டு 25ல் ரூ.84 லட்சத்தை அமர்வுக் கட்டணமாகப் பெற்றார், இது நிதியாண்டு 24-ல் அவர் பெற்ற ரூ.25.20 லட்சத்தை விட மூன்று மடங்கு அதிகமாகும்.

மற்றொரு வாரிய உறுப்பினரான KPMG-யின் முன்னாள் மூத்த ஆலோசகரான பாவ்னா தோஷி, ரூ.74.75 லட்சத்தை ஈட்டினார், இது நிதியாண்டு 24-ல் அவர் ஈட்டிய ரூ.41.65 லட்சத்தை விட 79% அதிகமாகும்.


வங்கி இயக்குநர்கள் ஒரு நிர்வாக குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அமர்வு கட்டணமாக ரூ.1 லட்சம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *